fbpx
Homeபிற செய்திகள்இந்திய குளிர் சங்கிலி சந்தையை வெளிப்படுத்திய ‘ரெப்கோல்ட்’

இந்திய குளிர் சங்கிலி சந்தையை வெளிப்படுத்திய ‘ரெப்கோல்ட்’

சென்னை வர்த்தக மையத்தில் இந்தியன் சொசைட்டி ஆஃப் ஹீட்டிங், ரெஃப்ரிஜிரேட்டிங் மற்றும் ஏர் கண்டி ஷனிங் இன்ஜினியர்ஸ் (ISHRAE) மற்றும் இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், ‘ரெப்கோல்ட்’ (REFCOLD) இந்தியா 2023 நிகழ்வானது தொழில்துறையை மாற்றியமைக்கும் இலக் குடன் துவங்கப்பட்டுள்ளது.

தவிர, குளிர்பதனம் மற்றும் குளிர்-சங்கிலித் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2027-ம் ஆண்டுக்குள் சுமார் 4.3 டிரில்லியன் ரூபாய்க்கு பரந்த சாத்தியமான குளிர்-சங்கிலி சந்தைக்கான இலக்கினை வெளிப் படுத்தியது.

ISHRAEதேசியத் தலைவர் யோகேஷ் தக்கர் பேசுகையில், “ஒருங்கி ணைந்த குளிர் சங்கிலி தீர்வுகளை ஏற்றுக்கொள்வதென்பதானது, பாரம் பரியமிக்க அழிந்துபோகக்கூடிய துறை யில் ஒரு குறிப்பிடத்தக்க புரட்சியை ஏற்படுத்தும். சந்தைசூழல் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியில் கணிசமான மாற்றங்களைக் கொண்டுவரும்.

60% விவசாயத்தை தொழிலாக மேற்கொள்ளும் மக்கள் வாழும் இந்நாட்டில் இது மிகவும் முக்கியமானது. ஒருங்கிணைந்த குளிர் சங்கிலி தீர்வுகளின் திறனைப் பயன்படுத்த, தளவாடங்களை மேம்படுத்துதல், மதிப்பு கூட்டல் வசதிகளை மேம்படுத்துதல், பசுமை குளிர்பதன நடைமுறைகளை பின்பற்றுதல் மற்றும் ஆற்றல்-திறனுள்ள குளிரூட்டும் முறைகள் மற்றும் இயற்கை குளிர்பதனங்கள் ஆகியவை மிக முக்கியமானது.

இந்தியாவின் இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ் நிர்வாக இயக்குநர் யோகேஷ் முத்ராஸ் பேசும்போது, ‘ரெப்கோல்ட்’ புதிய எல்லைகள் மற்றும் மதிப்புமிக்க ஒத் துழைப்புக்கான வாய்ப்புகளைத் திறக்கும் ஒரு மாற்றத்தக்க பயணத்தை வழங்குகிறது” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img