பிரிட்டன் வாகன நிறுவனமான எம்.ஜி. மோட்டார் இந்தியா, எம்.ஜி. ஸ்டுடியோஸ் என்ற தனித்துவமான, நிஜ அனுபவத்தை வழங்கும் டிஜிட்டல் மையத்தை சென்னையில் துவங்கியுள்ளது.
விர்ச்சுவல் ரியாலிட்டி (வி.ஆர்.), ஆகுமென்ட்டட் ரியாலிட்டி (ஏ.ஆர்.) உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் இன்டராக்டிவ் ஆதாயங்களை பயன்படுத்தும் இந்த ஸ்டூடியோ, எம்.ஜி. பிராண்டினை அனைத்து கார் ஆர்வலர்களிடமும் நெருக்கமாக அழைத்துச்செல்லும்.
எம்.ஜி. ஸ்டுடியோஸில் டிஜிட்டல் முறையில் இயங்கும் ஒரு முகப்புத் திரை, வீடியோ வால் கான்ஃபிகரேட்டர், வி.ஆர்./ ஏ.ஆர். பகுதியுடன் கூடிய பிரம்மாண்டமான விஷுவலைசர் போன்ற அம்சங்கள் உள்ளன.
பல்வேறு ரகங்களில் எம்.ஜி. மெர்ச்சன்டைஸ் தயாரிப்புகள் இந்த எம்.ஜி.ஸ்டியோஸில் கிடைக்கும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் பிராண்டின் மீதான அன்பை வெளிப்படுத்தவும், எம்.ஜி., அனுபவத்தின் ஒரு பகுதியை அவர்களுடன் வீட்டுக்கு எடுத்துச் செல்லவும் முடியும்.
தொழில்நுட்ப ஆர்வலராகவும், வாகன பிரியர் களாகவும் இருக்கும் நவீன, நகர்ப்புற வாடிக்கையாளரின் விருப்பங்கள் மற்றும் சிந்தனைகளை எதிரொலிக்கும் வகையில் பன்முகத்தன்மையுடன் கூடிய ஒரு நெருக்கமான டிஜிட்டல் அனுபவ சூழலை வழங்குவதற்கான ஒரு முன்முயற்சியே இந்த எம்.ஜி.ஸ்டியோஸ் என அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.