fbpx
Homeபிற செய்திகள்சிறு, குறு, நடுத்தர நிறுவன வணிக வளர்ச்சிக்கு ரூ.1100 கோடி கடனுதவி: ‘கினரா கேபிடல்’ இலக்கு

சிறு, குறு, நடுத்தர நிறுவன வணிக வளர்ச்சிக்கு ரூ.1100 கோடி கடனுதவி: ‘கினரா கேபிடல்’ இலக்கு

கினரா கேபிடல் நிறுவனம் 2024-ம் நிதி ஆண்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வணிக வளர்ச்சிக்கு 1,100 கோடி ரூபாய் கடன் உதவி வழங்க இருப்பதாக அறிவித்தது.

இந்நிறுவனத்தின் ‘மைகினரா செயலி’ தமிழ் மொழி யிலும் கிடைப்பதால், இந்த நிறுவனங்கள் வர்த்தகத்திற்கு தேவையான கடன் உதவியை அவர்களின் ஸ்மார்ட் போனில் இருந்தே விண்ணப்பிக்கலாம்.

கினரா கேபிடல் நிறுவனத்தின் தலைமை செயல் பாட்டு அதிகாரி திருநாவுக்கரசு கூறியதாவது: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பகுதியில் கடந்த 2023-ம் நிதி ஆண்டில் மொத்தம் 656 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இது 2022-ம் நிதி ஆண் டைக் காட்டிலும் 130 சதவீதம் அதிகம் ஆகும்.

இந்த நிதி ஆண்டில் இந்நிறுவனங்களுக்கு 1,100 கோடிக்கும் அதிகமான கடன் உதவியை வழங்க திட்டமிட்டுள்ளோம் என்றார். கினரா கேபிடல் நிறுவனம் கடந்த 2012-ம் ஆண்டு துவங்கப்பட்ட நாள் முதல் இதுவரை 33,000 நிறுவனங்களுக்கு 1,960 கோடி ரூபாய் கடன் உதவி அளித்துள்ளது.

‘கினாரா ஹெர்விகாஸ் திட்டத்தின்’ மூலம் பெண் தொழில்முனைவோருக்கு வழங்கப்படும் கடன்களுக்கு முன்கூட்டியே தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

இன்றுவரை, தமிழ்நாட்டில் உள்ள 2,140 பெண் தொழில்முனைவோருக்கு ஹெர்விகாஸ் வணிகக் கடன் திட்டத்தின் மூலம் 226 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 39 இடங்களில் இதன் கிளைகள் செயல்பட்டு வருகின்றன.

படிக்க வேண்டும்

spot_img