ஈரோடு மாவட்டம், சத்தியமங் கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மலைக்கிராம ஊராட்சி பகுதிகளான குத்தியலத்தூர், கூத் தம்பாளையம், குன்றி ஆகிய கிராம ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா செய்தியாளர் பயணத்தின்போது, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
மாவட்ட ஆட்சியர் சத்திய மங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குத்தியலத்தூர் ஊராட் சியில் நபார்டு திட்டத்தின் கீழ், கடம்பூர் மாக்கம்பாளையம் சாலை குத்தியலத்தூர் பள்ளம் ஓடையில் ரூ.333.40 லட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டும் பணியினையும், கடம்பூர் மாக்கம்பாளையம் சாலை சர்க்கரை பள்ளம் ஓடையில் ரூ.335.50 லட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டும் பணியினையும், குத்தியலத்தூர் ஊராட்சி அரிகியம் மேலூர் பகுதியில் ஜல்ஜிவன் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி யினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இப்பகுதியில் குடிநீர், சாலை வசதி மற்றும் மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை தேவை களை முழுமையாக நிறைவேற்றிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கூத்தம்பாளையம் ஊராட்சி கோம்பைத் தொட்டி பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் சமத் துவ மயானம் கட்டப்பட்டு வருவதையும், அதே பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அங்கன் வாடி மையம் கட்டப்பட்டு வருவதையும், மாக்கம்பாளையம் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.16.40 லட்சம் மதிப்பீட்டில் வேளாண்மை இருப்பு கிடங்கு கட்டப்பட்டு வருவதையும், குன்றி ஊராட்சி கோவிலூர் பகுதியில் பாரத பிரதம மந்திரி அனைவருக்கும் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ், தலா ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் 32 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவதையும்,
குத்தியலத்தூர் ஊராட்சி அணைக்கரை பகுதியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டி டத்தினையும் மற்றும் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமையலறை கட்டிடத்தினையும் என சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மலைக் கிராம பகுதிகளான குத்தியலத்தூர், கூத்தம்பாளையம், குன்றி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, திட்டப்பணிகளை விரைந்து முடித்திட அலுவலர் களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர் கூத்தம்பாளையம் ஊராட்சி கோம்பைத் தொட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார்.
மாவட்ட ஆட்சியர் கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவ அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின் போது, சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி
அலுவலர் அப்துல் வகாப், சத்தியமங்கலம் வட்டாட்சியர் சங்கர் கணேஷ், கூத்தம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா, உதவி பொறியாளர்கள் முருகன், ஜெயகாந்தன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.