சென்னையை சேர்ந்த ஜெம் மருத்துவமனை யில் உள்ள நவீன எண் டோஸ்கோபி சிகிச்சை மற்றும் இரைப்பை குடல் துறை நவீன எண்டோஸ்கோபி சிகிச் சையில் சமீபத்திய கண்டு பிடிப்புகளை மையமாக கொண்ட மூன்று நாள் சர்வதேச மாநாடான ஸ்கோப் 2025 ஐ நடத்தியது.
உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானியும், எம்.எஸ்.எஸ்.ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவ ருமான டாக்டர் சௌமியா சுவாமிநாதன் தலைமை விருந்தினராகவும், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன் நாகநாதன் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின்போது பத்ம விபூஷன் டாக்டர் நாகி ரெட்டிக்கு “ஜெம் லைஃப் டைம்“ விருது வழங்கி பாராட்டப்பட்டது.
ஐடிசி கிராண்ட் சோழாவில் நடைபெற்ற இந்த மாநாட்டில், நாடு முழுவதிலும் இருந்து 700க்கும் மேற்பட்ட பிரதிநி திகளும், உலகம் முழுவதும் இருந்து 40க்கும் மேற்பட்ட முன்னணி அமைப்புகளும் கலந்து கொண்டன.
நவீன எண்டோஸ்கோபி சிகிச்சையில் புகழ்பெற்ற நிபுணரான டாக்டர் ஆர்.வினோத்குமார் தலைமையில், சென்னை ஜெம் மருத்துவமனையில் உள்ள அதிநவீன எண் டோஸ்கோபி தொகுப் புகளில் இருந்து சிக்கலான எண்டோஸ்கோபி சிகிச்சைகள் பற்றிய நேரடி விளக்கங்கள் மாநாட்டில் இடம் பெற்றன.
ஜெம் மருத்துவமனைக ளின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் பழனி வேலு கூறுகையில், “ஜெம் மருத்துவமனையை பொருத்தவரை, நாங்கள் எப்போதும் முன்னணியில் இருந்து வழி நடத் துவதில் நம்பிக்கை கொண் டுள்ளோம். மேலும் ஸ்கோப் 2025 மூலம், அந்த நோக்கத்தை மேலும் முன்னெடுத்து செல்கி றோம்“ என்றார்.
சென்னை ஜெம் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதி காரி டாக்டர் எஸ் அசோகன் கூறுகையில், “ஸ்கோப்2025 என்பது தொழில்நுட்பங்களை காண்பிப்பது மட்டு மல்ல, இது மருத்துவ நிபுணத்துவம், தொழில் நுட்ப முன்னேற்றம் மற்றும் உணர்ச்சிபூர்வமான கற்றலை ஒருங்கிணைப் பதன் மூலம் எண்டோஸ் கோபியின் எதிர்காலத்தை வடிவமைப்பது பற்றியது ஆகும்” என்றார்.
தொடர்ந்து சென்னை ஜெம் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் பி.செந்தில்நாதன், இந்திய நிபுணத்துவத்துடன் சர்வதேச நிபுணர்களை ஒருங்கிணைப்பது, புதிய யோசனைகள் மற்றும் முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கிறது என்று கூறினார்.



