கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதற் காக, வடபழனி ஃபோர்டிஸ் மருத்துவ மனை, அரிய வகை ரத்தக் குழுவான ‘பாம்பே பினோடைப்’ ரத்தத்தை அனுப்பி உதவியது.
ஃபோர்டிஸ் மருத்துவமனை வடபழனி கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையிலிருந்து நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட 63 வயது பெண் நோயாளிக்கு அரிய வகை ரத்தம் தேவைக்கான கோரிக்கையைப் பெற்றது.
இந்தக் கோரிக்கையை ஃபோர்டிஸ் வடபழனியின் ரத்த மையம் மதிப்பிட்டு, தேவையான ஏற்பாடுகளை செய்து ரத்தம் கொல்கத்தாவுக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டது.
கொல்கத்தா மருத்துவக் கல்லூரி
கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு 6 மணி நேரத்திற்குள் ஒரு யூனிட் ரத்தம் பாதுகாப்பாக வழங்கப்பட்டது. மறுநாள் கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் பாம்பே ஆர்எச் பாசிட்டிவ் நிரம்பிய சிவப்பு அணுக்கள் கிராஸ்மேட்ச் செய்யப்பட்டு ரத்தமாற்றம் செய்ய பாதுகாப்பானதாக அறிவிக்கப்பட்டது.
நோயாளிக்கு அடுத்த நாள் வெற்றிகரமாக பாம்பே ரத்தம் ஏற்றப்பட்டு 24 மணி நேரத்திற்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
2022ம் ஆண்டில் இந்தியா முழுவதும் இதுபோன்ற 32 அரிய ரத்தப் பொருள் பரிமாற்றத்தை ஒருங்கிணைத்த சென்னையைச் சேர்ந்த தன்னார்வ ரத்ததானக் குழுவான பிளேட்லெட் கிளப் இந்த ரத்தப் பரிமாற்றத்தை வெற்றிகரமாக செய்தது. வடபழனி, ஃபோர்டிஸ் மருத்துவமனையின் ரத்த மாற்று மருத்துவ ஆலோசகர் டாக்டர் சண்முகபிரியா ஆர்.ஏ., கூறியதாவது:
1952-ம் ஆண்டு டாக்டர் ஒய் எம் ஃபெண்டே என்பவரால் மும்பையில் அரிய பம்பாய் ரத்த வகை கண்டுபிடிக்கப்பட்டது. உலகம் முழுவதும் 4 மில் லியனில் ஒருவருக்கு மட்டுமே பாம்பே வகை அல்லது “எச் எச்” குழு உள்ளது. இது அரிய வகை ரத்த வகையாகும்.
அரிதான பாம்பே ரத்த வகையும், ‘ஓ’ ரத்த வகையும் அடிக்கடி குழப்பிக் கொள் ளப்படுகின்றன. ‘எச்’ ஆன்டிஜெனுக்கான ஒரு குறிப்பிட்ட சோதனைக்குப் பிறகு தான் பாம்பே ரத்தக் குழுவுக்கும் ‘ஓ’ ரத்தப் பிரிவினருக்கும் இடையே உள்ள வேறுபாடு கண்டறிய முடியும்.
இந்த இரத்த வகை கொண்டவர்கள் மிகக் குறைவு, எனவே தன்னார்வலர்களை அடையாளம் காண்பது சவாலானது.
இந்தக் குறிப்பிட்ட நன்கொடையாளரை ஃபோர்டிஸ் மருத்துவமனையில் இருந்த நோய்வாய்ப்பட்ட தனது தந்தைக்கு ரத்த தானம் செய்தபோது கண்டறிந்தோம் என்றார். வடபழனி ஃபோர்டிஸ் மருத்து வமனை தலைவர் வெங்கட் ஃபனிதர் நெல் லூரி கூறியதாவது:
அரிய வகை ரத்தம் போன்றவற்றிக்கு, தேவையான உள்கட்டமைப்பு இருந்தால், எல்லைகளுக்குள் ரத்தத்தை மாற்றுவதன் மூலம் உயிர்களைக் காப்பாற்ற முடியும். வடபழனி ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனைத்து ரத்த வகைகளையும் பரிசோதித்து, சேமித்து, நாடு முழுவதும் வழங்குவதற்கான அதிநவீன வசதிகள் உள்ளன என்றார்.