fbpx
Homeபிற செய்திகள்தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ஐஓசி ரூ.2200 கோடி முதலீடு செய்ய முடிவு

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ஐஓசி ரூ.2200 கோடி முதலீடு செய்ய முடிவு

தமிழகத்தில் பல்வேறு திட்டங் களை செயல்படுத்த, இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐஓசி) அடுத்த 2 ஆண்டுகளில் ரூ. 2200 கோடியை முதலீடு செய்ய முடி வெடுத்துள்ளது என ஐஓசியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி எக்ஸ்கியூட்டிவ் இயக்குநர் பி.சி.அசோகன் தெரிவித்தார். .அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

இந்தியாவின் மிகப்பெரிய எரிபொருள் சுத்திகரிப்பு மற்றும் விற்பனையாளரான இந்தியன் ஆயில், 2046-ம் ஆண்டிற்குள் உமிழ்விண் தன்மையை (வெப் பத்தை வெளிப்படுத்தாத நிலையை அடைய) செயல்பாட்டு முறை மூலம் நிகர -பூஜ்ஜிய இலக்கை அடைய தீர்மானித்துள்ளது.

கடந்த ஆண்டு, காலநிலை மாற்றம் குறித்த COP-26 உச்சி மாநாட்டில், பிரதமரால் அறிவிக்கப்பட்ட பஞ்சாமிர்த குறிக்கோளின் ஒரு பகுதியாக, 2070ம் ஆண்டுக்குள் இந்தியாவின் உமிழ் விண் தன்மையை நிகர பூஜ்ஜிய இலக்கை அடையும் உறுதிப்பாடு, நாட்டின் மிகப்பெரிய எரிபொருள் நிறுவனமான இந்தியன் ஆயிலு டன் இந்த வரலாற்று உறுதிப்பாடு ஒத்துப்போகிறது.

இந்தியன் ஆயில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை தயாரிப்பதில் வெற்றி கண்டுள்ளது. இந்தியன் ஆயில், தமிழ் நாட்டில் கம்ப்பிரஸ்ட் பயோகேஸ் (CBG) உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்காக 200-க்கும் மேற்பட்ட ஆர்வ விருப்ப விண்ணப்பங்களை (LOI) வழங்கியுள்ளது. இந்த முறையில் வந்த விண்ணப்பங்கள் மூலம், 2 ஆலைகள் ஏற்கனவே இயங்கி வருகின்றன.

மேலும் தமிழ்நாட்டில் 6 விற்பனை நிலையங்களிலும், புதுச்சேரியில் ஒரு விற்பனை நிலையத்திலும், “IndiGree” என்ற பிராண்ட் முத்திரை பதித்த CBG ஐ விநியோகித்து வருகின்றன.

உற்பத்தி பொருட்களின் பங்களிப்பை விரிவுபடுத்தும் வகையில், இந்தியன் ஆயில் புதிய உன்னதமான செயல்திறன் கொண்ட டீசல் பிராண்டான XtraGreenஐ அறிமுகப்படுத்தியது. தற்போது தமிழ்நாடு முழுவதும் 303 விற்பனை நிலையங்களில் கிடைக்கிறது.

சமீபத்தில், 100 ஆக்டேன் தரமதிப்பீட்டு எரிபொருளான XP100ஐ இந்தியன் ஆயில், அறிமுகப்படுத்தியது. இது குறிப்பாக உயர்தர சொகுசு கார்கள் மற்றும் உயர்தர இரு சக்கர வாகனங்களின் செயல்திறனை மேம்படுத்துகிறது.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மையம்

இந்தியன் ஆயிலின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மையத்தால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட உன்னதமான நானோ தொழில்நுட்பமுறையில் பதப்படுத்தப்பட்ட Indane XTRATEJ என்ற பிராண்டை வணிகம் மற்றும் தொழில்துறை பயன்பாடுகளுக்காக விநியோகப்படுத்தியுள்ளது.

இண்டேன் காம்போசிட் சிலிண்டர் தற்போது 5 கிலோ மற்றும் 10 கிலோ அளவுகளில் தமிழ்நாடு முழுவதும் 395 விநியோகஸ்தர்கள் மூலம் கிடைக்கிறது.

இந்தியன் ஆயில் இஸ்ரேலிய தொழில்நுட்ப நிறுவனமான பினெர்ஜியுடன், கைகோர்த்து, கூட்டு முயற்சியின் மூலம் இந்தியாவில் அலுமினியம்- காற்று தொழில்நுட்பத்தை தயாரித்து வணிகமயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

எங்களின் துணை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL), மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு 10.5 MMTPA சுத்திகரிப்பு ஆலையை இயக்கி வருகிறது.

இந்தியன் ஆயிலின் தமிழ்நாடு மாநில அலுவலகம், 2,780 சில்லறை விற்பனை நிலையங்கள், 924 LPG விநியோகஸ்தர்கள், 96 CNG/CBG விற்பனை நிலையங்கள், 44 ஆட்டோ LPG விநியோக நிலையங்கள் மற்றும் 270 மண்ணெண்ணெய் விநி யோகஸ்தர்கள் மூலம் தமிழகத்தின் 39 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 2 மாவட்டங்களின் எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.

ஆசனூர் மற்றும் வல்லூரில் உள்ள குழாய் மூலம் அமைந்த முனையங்கள், காமராஜர் துறைமுகத்தில் கட்டுப்பட்ட நிலைக்குரிய POL / LPG துறைமுக அணைகரைகள் மற்றும் அம்முல்வோயல் கிராமத்தில் உள்ள உலகின் 2வது பெரிய ஒருங்கிணைந்த லூப்ஸ் வளாகம், எரிவாயுகளை குழாய் மூலம் எடுத்து செல்லும் குழாய்த்திட்டங்கள் எண்ணூர்-திருவள்ளூர்-பெங்களூரு-புதுச்சேரி -நாகப்பட்டினம் -மதுரை-தூத்துக்குடி (ETBPNMT) எரிவாயு குழாய் மற்றும் சென்னை -திருச்சி- மதுரை (CTM) பைப்லைன் விரி வாக்கத்திற்காக, இந்தியன் ஆயில் நிறுவனம் அடுத்த 2 ஆண்டுகளில் ரூ. 2200 கோடியை முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img