fbpx
Homeபிற செய்திகள்மூன்றாம் முழுமைத் திட்டம் உருவாக்குவதற்காக சென்னைப் பெருநகர வளர்ச்சி குழுமம்-இயற்கை பாதுகாப்பு நிறுவனம் ஒப்பந்தம்

மூன்றாம் முழுமைத் திட்டம் உருவாக்குவதற்காக சென்னைப் பெருநகர வளர்ச்சி குழுமம்-இயற்கை பாதுகாப்பு நிறுவனம் ஒப்பந்தம்

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் மூன்றாம் முழுமைத்திட்டம் உருவாக்குவதற்காக இயற்கை பாதுகாப்பு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

முதல்வர் வழிகாட்டுதலின்படி, சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தலின்படி, தலைமைச் செயலகத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை கூட்ட ரங்கில் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் முதன்மை செயலாளர் அபூர்வா,
முன்னிலையில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் மூன்றாம் முழுமைத் திட்டம் (2026-2046) உருவாக்குவதற்கான ஆய்வுகளில் பசுமை சார்ந்த திட்டமிடலில் உதவுவதற்காக, லாபமில்லா அமைப்பான இயற்கை பாதுகாப்பு நிறுவனத்துடன் (The Nature Conservancy) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

புரிந்துணர்வு ஒப்பந்தமானது, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா மற்றும் இயற்கை பாதுகாப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் முனைவர் அன்னபூர்ணா வாஞ்சீஸ்வரன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வு நடைபெற்றது.

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம், தற்பொழுது சென்னைப் பெருநகர வளர்ச்சிக்காக, மூன்றாம் முழுமைத் திட்டத்தை உருவாக்குவதற்கான ஆய்வுகளை உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்புற வாழ்விட வளர்ச்சித் திட்டத்தின் கீழ் (ஜிழிபிபிஞிறி) செயல்படுத்தி வருகிறது.

முழுமைத் திட்டம் மற்றும் நகர திட்டமிடலில் முக்கிய துறைகளான இயற்கையை அடிப்படையாக கொண்டு ஏற்படுத்தப்படும் தீர்வுகள் (Nature Based Solutions),, நீர் வழி மற்றும் பசுமை வழியிலான உட்கட்டமைப்புகள் (Blue-Green Infrastructure), பருவநிலை மாறுதலுக்கேற்றவாறு தேவையான திட்டமிடல்களை முன்னெடுக்க இப்புரிந் துணர்வு ஒப்பந்தம் குறிப்பிடத்தக்க வகை யில் பயனுள்ளதாக அமையும்.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், இயற்கை பாதுகாப்பு நிறுவனம் சென்னையை பசுமையாகவும், இயற்கை பாதுகாப்புடன் உருவாக்குவதற்கு ஒரு மைல் கல்லாக அமையும். இந்நிறுவனம் சதுப்பு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண் டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img