உள்நாட்டில் உள்ள தொழில் துறைகளின் வலிமையான ஆதரவு மற்றும் மத்திய அரசின் அதிவேக மூலதன செலவினம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது 2024-ம் நிதி ஆண்டில் 6.5 முதல் 6.7 சத வீதமாக உயரும் என்று இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் தினேஷ் தெரி வித்தார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக பத்திரிகையாளர்களை சந்தித்த தினேஷ் கூறியதாவது:
அரசின் மூலதன செலவானது பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு உந்துசக்தியாக இருப்பதோடு, உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சிக்கு பெருநிறுவனங்களின் ஆரோக்கியமான செயல்பாடுகள் மற்றும் நன்கு கட்டமைக்கப்பட்ட நிதி அமைப்பு ஆகியவையும் முக்கியமானதாக உள்ளது.
நடுத்தர கால வளர்ச்சி வாய்ப்புகள் ஆரோக்கியமானவையாக இருக்க வேண்டும். நிதி மற்றும் பணவியல் கொள்கை களுடன் கூடிய பல்வேறு சீர்திருத்தங்களின் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் 6.6 சதவீதமாக இருந்த இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அடுத்த 10 ஆண்டுகளில் அதாவது நிதி ஆண்டு 2021 முதல் 2031 வரையிலான காலத்தில் 7.8 சதவீதமாக உயரும்.
‘தரமான பணி 2.0’ திட்டம்
மூலதன முதலீடுகள், மத்திய அரசின் ஜிஎஸ்டி, வரி விதிப்பு, உற்பத்தித்தி றனை மேம்படுத்தும் சீர்திருத்தங்கள் உள்ளிட்டவை மற்றும் தனியார் துறைகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை கள் நடுத்தர கால வளர்ச் சியை ஊக்குவிக்கும். எங்கள் கூட்டமைப்பு சார்பில் ‘தரமான பணி 2.0’ திட்டம் செயல்படுத் தப்படும்.
சுகாதார வசதிகள், சுற்றுலா மற்றும் பிற சேவைகள் உள்ளிட்ட சேவைகளுக் கான சிறந்த தரம் மற்றும் எல்லைகளை உருவாக்க இருக்கிறோம். நம்பிக்கையை வளர்ப்பது என்பது தரத்திற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகும். இந்த முயற்சியானது தொழிற்துறை வளர்ச் சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்றார்.