ஈரோட்டில் சேலம்- கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஃபார்ச்சூன் சிட்டியில் பிரீமியம் மல்டிப்ளெக்ஸ் திரையரங்கை அமைக்க, ஃபார்ச்சூன் சிட்டி மற்றும் பிராட்வே சினிமாஸ் நிறுவனங்கள் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளன என்று டெக்ஸ்வேலி துணைத் தலைவர் யு.ஆர்.சி. தேவராஜன் மற்றும் பிராட்வே சினிமாஸ் தலைவர் சதிஷ் குமார் தெரிவித்தனர். இந்த மல்டிப்ளெக்ஸ் 2028 ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் வகையில் திட்டமிடப் பட்டுள்ளது. ஈரோடு மற்றும் கொங்கு மண்டல மக்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்பட்ட திரைப்பட அனுபவத்தை வழங்கும் வகையில் இது அமைய உள்ளது.
சுமார் 42 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஃபார்ச்சூன் சிட்டியில் ஷாப்பிங், உணவு, பொழுதுபோக்கு, விளை யாட்டு, நிகழ்ச்சிகள் மற்றும் லைஃப்ஸ்டைல் வசதிகள் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன. புதிய மல்டிப் ளெக்ஸ், ஃபார்ச்சூன் சிட்டியின் பொழுதுபோக்கு அம்சத்தை மேலும் வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டது.
2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிராட்வே சினிமாஸ், நவீன திரையரங்கத் தொழில்நுட்பம் மற்றும் பிரீமியம் பார்வையாளர் வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. கோவையில் ஒன்பது திரைகளுடனும், திருப்பூரில் நான்கு திரைகளுடனும் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.



