Homeபிற செய்திகள்தமிழ் மொழியை உலகெங்கும் கொண்டு செல்ல மத்திய அரசு முயற்சித்து வருகிறது

தமிழ் மொழியை உலகெங்கும் கொண்டு செல்ல மத்திய அரசு முயற்சித்து வருகிறது

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே திருமலை கிராமத்தில் உள்ள 2400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜெயினர் கோயில் ராஜராஜசோழனின் சகோதரி குந்தவை நாச்சியார் சமண மதத்தை பரப்பியதால் குந்தவை ஜெயினர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் மகாவீரர் சிலை உட்பட பல்வேறு சமணர் சிலைகள் உள்ளன.

தொல்பொருள் துறை கட்டுப்பாட்டில் மலைமீது உள்ள பாறையில் வடிக்கப்பட்ட 18 அடி உயர நேமிநாதர் சிலை உள்ளது. இது தமிழகத்தில் உள்ள நேமி நாதர் சிலைகளை விட உயரமானது. இங்குள்ள ஜெயினர் மடத்தை ஸ்வஸ்திக் தவளகீர்த்தி சுவாமிகள் நிர்வாகம் செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை ஜெயினர் மடத்தில் ஜெயினர் பள்ளியில் ஆன்மீக பயிற்சி பெற்ற 300 மாணவர்களுக்கு சான்றிதழ், 240 மாணவர்களுக்கு சவிதா பவுண்டேசன் கல்வி உதவித்தொகை, சமயம், அறிவியல் தத்துவம் குறித்த ஆன்மீக புத்தகம் வெளியீடு விழா என நடந்தது. விழாவிற்கு காலை 11 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி திருமலை ஜெயினர் மண்டபத்திற்கு வருகை தந்தார்.

அப்போது கலெக்டர் பாஸ்கர பாண்டியன், எஸ்பி கார்த்திகேயன், கூடுதல் கலெக்டர் .ரிஷப், தவளகீர்த்தி சுவாமிகள் ஆகியோர் மலர் கொத்துகொடுத்து வரவேற்றனர்.
12 மணிக்கு விழா தொடங்கியது. விழாவிற்கு ஜெயினமட தவளகீர்த்தி சுவாமிகள் தலைமை வகித்தார்.

முதல் நிகழ்ச்சியாக பள்ளியில் ஆன்மீக பயிற்சி பெற்ற 300 மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் 240 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கி பேசியதாவது:
பாரத பூமி பழம்பெரும் பூமி. 2 ஆயிரத்து 400 .வருடங்களுக்கு முன்பு ஆச்சார்யா பத்ரபாபு பாடலிபுத்திரா தற்போதைய பாட்னாவிலிருந்து 12 ஆயிரம் முனிவர்களுடன் தெற்கு நோக்கி சரவணபெலகுலாவில் தங்கி தர்மத்தை வளர்த்தனர். இதிலிருந்து சில முனிவர்கள் திருமலைக்கு பயணித்தனர். இதற்கு இதுவே சான்று.

பாரதத்தின் உயிர் நாடி தர்மம், இந்த தர்மத்தை வளர்த்ததில் சமணர்களுக்கு பங்கு உண்டு. ரிஷப தீர்த்தங்கரர் ஜெயினர்களின் முதல் தீர்த்தங்கரர். இவர் போதித்த அடிப்படை தர்மங்கள் அகிம்சா, அனேகானந்தா ஆகும். அகிம்சா என்பது அனைத்து உயிர்களையும் சமமாக மதிப்பது, தீங்கு விளைவிக்காமல் இருப்பது. அநேக ஆனந்தா அனேகானந்தா என்பது பொது மனிதனுக்கும் புரியும்படி சொல்வது ஆகும்.

இந்த நெறிகளை உலகில் பயன்படுத்தினால் ஒற்றுமை நிலவும். இன்று பல நாடுகள் போரி ட்டுக் கொள்கிறது. உலகில் பல நாடுகள் பயங்கர ஆயுதங்களான அணு ஆயுதம், ஏவுகணை என பயங்கர ஆயுதங்களை கையில் வைத்துள்ளனர். இந்த ஆயுதங்களைக் கொண்டு அனைத்து உயிரினங்களையும் ஒரு வினாடியில் அழிக்க முடியும். சமண நெறிகள் மூலம் போர் களை தடுத்து நிறுத்த முடியும்.

அனைத்து உயிர்களும், சமமாக சந்தோஷ நிலையில் இருக்கும் பாரத தேசம் தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது. இதை உலகின் பல இடங்களுக்கு நாம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். இது நம் கடமை ஆகும். பாரதத்தில் தான் தர்மம் இருக்கிறது. இது நமக்கு கிடைத்த பரிசு. பாரத தேசத்தில் பல பழமையான மொழிகள் சமஸ்கிருதம், தமிழ் உள்ளது. தொன்மையான மொழி என்றால் அது தமிழ், சமஸ்கிருதம் ஆகும்.

முதன்மையான மொழி எது முன், எது பின் என்று சொல்ல முடியாது. பாரதம் என்பது வந்தோரை வாழவைக்கும் புனித பூமி. இதுதான் தமிழில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என சொல்லப்படுகிறது. பல மனிதர்கள் வந்து தவம் இருந்த இந்த பூமிக்கு வந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழ் மொழி உலகெங்கும் கொண்டு செல்ல மத்திய அரசு முயற்சித்து வருகிறது. முதலில் வட இந்தியாவில் கொண்டு சென்று அதன் பெருமையை மக்களுக்கு புகட்ட 2 பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழி புகுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி உலக நாடுகள் எங்கு சென்றாலும் தமிழையும் திருக்குறளையும் பேசி பெருமை அடைகிறார். இவ்வாறு கவர்னர்ஆர்.எம்.ரவி பேசினார்.
இதனைத் தொடர்ந்து மலை மீதுள்ள கோவிலுக்கு சென்று நேமிநாதரை அவர் தரிசித்தார்.

படிக்க வேண்டும்

spot_img