Homeபிற செய்திகள்நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

நீர் வள நில வளத்திட்டத்தின் சார்பில் நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கு இரண்டு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி தர்மபுரி அடுத்த பழைய கோட்ரஸ் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இதில் விவ சாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

தொடர்ந்து, பாசன மேலாண்மை பணிகளில் விவசாயிகளின் பங்கேற்பு குறித்து நீர்வள பாசன துறை அதிகாரிகள் எடுத் துரைத்தனர். அதில் பாசன மேலாண்மை பணிகள் என்றால் என்ன, விவசாயிகளின் பங்கேற்பு பணிகள், தமிழ்நாடு விவசாயிகள் நீர்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மை சட்ட விவரங்கள், தமிழ்நாடு விவசாயிகள் நீர்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மை விதிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை நீரினை பயன்படுத்துவோர் சங்க குழுக்களுக்கு எடுத்துரைத்தினர். இந் நிகழ்ச்சிக்கு கணேசன் உதவி செயற்பொறியாளர் தலைமை தாங்கினார்.

மோகனப்பிரியா உதவி பொறியாளர் மற்றும் சந்தோஷ் உதவிப் பொறியாளர் முன்னிலை வகித்தனர். செல்வராஜ் சமூக மேம்பாட்டு வல்லுனர் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img