fbpx
Homeபிற செய்திகள்விசாகப்பட்டினத்தில் 3 நாட்கள் நடைபெற்றகனரா வங்கி அதிகாரிகள் சங்க அகில இந்திய மாநாடு:மீண்டும் பொதுச்செயலாளராக ரவிக்குமார்...

விசாகப்பட்டினத்தில் 3 நாட்கள் நடைபெற்றகனரா வங்கி அதிகாரிகள் சங்க அகில இந்திய மாநாடு:மீண்டும் பொதுச்செயலாளராக ரவிக்குமார் தேர்வு

கனரா வங்கி அதிகாரிகள் சங்கத்தின் 20வது பிரதி அகில இந்திய மூன்றாம் ஆண்டு மாநாடு விசாகப்பட்டினத்தில் 3 நாட்கள் நடைபெற்றது.
கனரா வங்கியின் மேலாண்மை இயக்குனரும், முதன்மை செயல் அதிகாரியுமான கே.சத்யநாராயண ராஜு மாநாட்டின் துவக்க விழாவில் முதன்மை விருந்தினராக பங்கேற்று சிறப்பித்தார். அவர் தனது துவக்க உரையில், கனரா வங்கியின் இமாலய வளர்ச்சியில் கனரா வங்கி அதிகாரிகள் சங்கத்தின் பெரும் பங்கினை குறிப்பிட்டு பாராட்டினார்.
பொதுச்செயலாளர் ரவிக்குமாரின் சீரிய தலைமையில் நமது பாரத நாடு முழுவதும் கனரா வங்கி அதிகாரிகள் ஆற்றி வரும் அரும் பெரும் வங்கிச் சேவைகள், நமது நாட்டினை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வதாக அவர் கூறினார்.
இந்த மாநாட்டில், சத்யநாராயணா ராஜுவின் வாழ்வின் பாதை மற்றும் முக்கிய திருப்புமுனைகளை விவரிக்கும் “THE MASTER STITCH” எனும் நூல், கனரா வங்கி அதிகாரிகள் சங்கத்தால் வெளியிடப்பட்டது. அதனை சத்யநாராயணா ராஜுவின் தாயார் ராம சீதா வெளியிட்டார்.
பொதுச்செயலாளர் ரவிக்குமார் பேசுகையில், கடந்த 3 ஆண்டுகளில் கனரா வங்கி அதன் மொத்த வணிகத்தை மேலும் 7 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் அதிகரித்ததற்கு, கனரா வங்கி அதிகாரிகளின் ஒற்றுமை மற்றும் அயராத உழைப்பே முக்கிய காரணம் என்று அவர் தெரிவித்தார்.
மாநாட்டின் இரண்டாம் நாளன்று, சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் தமது அறிக்கையினை சமர்ப்பித்தார். இதனையடுத்து 100க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் போக்கினை கடுமையாக சங்கம் எதிர்ப்பதாக அறிவிக்கப்பட்டது.
மாநாட்டின் இறுதி நாளன்று, சங்கத்தின் பொருளாளர் ரவி சங்கர் தனது அறிக்கையினை சமர்ப்பித்தார். அதன் பின், சங்க நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. ரவிக்குமார், மீண்டும் பொதுச் செயலாளராக ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜிவ் நிகம் தலைவராகவும், ஜேக்கப் அவைத்தலைவராகவும், ராமபிரசாத், முதுநிலை துணைத் தலைவராகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
“சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் மணிமாறனை, தற்போதைய பொதுச்செயலாளர் ரவிகுமாரும் விழா குழுவினரும் இணைந்து அவரின் சிறப்பான பணி, அர்ப்பணிப்பு மற்றும் வழிகாட்டுதல் சங்க வளர்ச்சிக்கு பெரும் உறுதுணையாக இருந்தது என தெரிவித்து கௌரவித்தனர்.
மாநாட்டில் சங்கத்தின் மதுரை வட்டத்திற்கான புதிய அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சுந்தரராஜன் இணை பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். காமாட்சி ராஜா மற்றும் கணேசன் ஆகியோர் துணை பொதுச் செயலாளர்களாகவும் தர்மர், விமல், ஆத்ரேயா, கார்த்திக் ஆகியோர் உதவி பொதுச் செயலாளர்களாகவும் தேர்வானார்கள்.
மத்திய குழு உறுப்பினர்களாக விக்னேஷா, பாரணிதரன், ரம்யா, ராஜவேல், ராஜ்மோகன், சிவகுமரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மண்டல செயலாளர்களாக திருநெல்வேலி – ஜோசப் ராஜா, தூத்துக்குடி- ஜெயராம், திண்டுக்கல் -அனந்தராமன், தேனி – மகாலட்சுமி, திருப்பூர் -பிரதீப், தஞ்சாவூர் – மைக்கேல் ராஜ், மதுரை – முத்துக்குமார், கோயம்புத்தூர் – I -ஆனந்தன், கோயம்புத்தூர் -II அனிதா ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
மூன்றாம் முறையாக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரவிக்குமாருக்கு அனைத்து பிரதிநிதிகளும் வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் மாநாட்டினை சிறப்பாக திட்டமிட்டு நடத்திய வரவேற்பு குழு தலைவர் ராமபிரசாத் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், உறுப்பினர்கள், ஆகியோருக்கு பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img