மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் குன்னூரில் உள்ள கார்டைட் ஃபேக்டரி மேல்நிலைப் பள்ளி மாணவர்களை இந்திய ராணுவத்தில் சேர ஊக்குவிக்கும் வகையில் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டரைச் சேர்ந்த கேலண்ட்ரி விருது வென்றவர் உரையாற்றினார்.
2002 ஆம் ஆண்டு ஜே&கேவில் நடந்த ஆபரேஷன் ஒன்றில் கேலண்ட்ரி விருது வென்றவருக்கு சேனா பதக்கம் வழங்கப்பட்டது.
மாணவரிடம் பேசும் போது, தாய்நாட்டிற்காக சேவை செய்வது தனக்கு ஈடு இணையற்ற திருப்தியை தருவதாக குறிப்பிட்டார். ஊக்குவிப்பு விரிவுரையில் மொத்தம் 325 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு மாணவரும் இந்திய இராணுவத்தால் ஈர்க்கப்பட வேண்டும் என்றும், தேசத்தை கட்டியெழுப்புவதில் அதன் பங்களிப்பை பெற வேண்டும் என்றும், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அதிக உயரங்களை அடைய கடுமையாக பாடுபட வேண்டும் என்றும் இரு பள்ளி முதல்வர்களும் தெரிவித்தனர்.
இந்திய ராணுவத்தின் முக்கியத்துவத்தை நமது இளைஞர்கள் புரிந்துகொண்டு இந்திய ராணுவத்தில் சேர உத்வேகத்தை பெற இதுபோன்ற ஊக்கமளிக்கும் விரிவுரைகள் எதிர்காலத்தில் தொடர வேண்டும் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இதற்காக வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டருக்கும் நன்றி தெரிவித்தனர்