தமிழகத்தில் மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கிடும் பணியை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
கடலூர் மாவட்டம், குறிஞ் சிப்பாடி வட்டாரத்தில் உள்ள கருங்குழி கிராமத்தில் மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கிடும் பணியை தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், தோட்டக்கலை மற்றும்மலை பயிர்கள் துறை இயக்குனர் குமாரவேல் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து,வேளாண்மைத் துறை சார்பில் 35 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 30 ஆயிரத்து 740 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன் னீர்செல்வம் வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-வேளாண்மைத்துறை மூலம் பல்வேறு மாவட்டங்களில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தை சேர்ந்த 27 ஆயிரம் மாணவர்கள் மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கீடு பணியில் கலந்து கொள்ள உள்ளனர்.
தமிழ்நாட்டில் 55 லட்சம் சர்வே எண்கள் உள்ளன. அதில் 24 கோடியே 45 லட்சம் சப் டிவிஷன் நிலங்கள் உள்ளன. கடலூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 67 ஆயிரத்து 143 சர்வே எண்கள் உள்ளன. இதில் 17 லட்சத்து 12ஆயிரத்து ம் 765 சப் டிவிஷன் நிலங்கள் உள்ளன. சுமார் 3 லட்சத்து 38 ஆயிரத்து 472 ஹெக்டேர்பரப் பில் 26 லட்சத்து 65 ஆயிரத்து 648 விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
வசாயத்திற்கு தேவையான உரம் தட்டுப்பாடில்லாமல் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது 1 லட்சத்து 60 ஆயிரத்து 937 மெட்ரிக் டன் யூரியா, 40 ஆயிரத்து 356 மெட்ரிக் டன் டி.ஏ.பி. 1 லட்சத்து 36 5 ஆயிரத்து 259 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு உள்ளன.அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கும்,பல்வேறு நிறு வனங்களில் கடனுதவி பெற்றிடவும் விவசாயிகளின் நில உடமை தொடர்பான விவ ரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்றவற்றை பல்வேறு துறைகளுக்கு ஒவ் வொரு முறையும் விவசாயி கள் தனித்தனியே வழங்க வேண்டிய நிலை உள்ளது.
தற்போது, அனைத்து நில விவரங்கள் மற்றும் பயிர்சாகு படி விவரங்கள் ஆகியவற்றை மின்னணு முறையில் சேகரித்து அவ்வப்போது புதுப் பித்து அவற்றை பல்வேறு துறைகளும் விவசாயிகளின் நில உடமை மற்றும் சாகுபடி செய்திருக்கும் பயிர் விவரம் போன்ற தகவல்களை பகிர்ந் திட ஏதுவாக தமிழ்நாட்டில் வேளாண் அடுக்கு திட்டம் கடந்த 2022-23-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் கிராம அளவில் பயிர் சாகுபடி விவரங்களை மின்னணு முறையில் கணக்கீடு செய்யும் முறை கடந்த 2023-24-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு 2024-25-ம் ஆண்டு ரபி பருவத்தில் அனைத்து மாவட்டங்களி லும் விவசாயிகள் தகவல்கள், பயிர் சாகுபடி கணக்கீடு மற்றும் புவியியல் வரைபடங்கள் இணைத்தல் ஆகிய பணிகளை மின்னணு முறையில் மூலம் முழுவ நலத் துறை முழுமையாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டு கருங்குழி பகுதியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த கணக்கீட்டு பணிக்கு வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் வணிகத்துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்ந்த அலுவலர்களோடு கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்திற்கு ALULL வேளாண்மை கல்லூரி மாணவர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
கடந்த 6.11.2024 அன்று தமி ழக அளவில் 24 மாவட்டங்களில் 48 கிராமங்களில் 47 வேளாண்மை கல்லூரிகளை சார்ந்த 3,585 மாணவர்கள் மூலம் முன்னோட்ட ஆய்வுப் பணிமேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, மங்களூர் மற் றும் நல்லூர் வட்டாரப் பகுதிகளில் மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கீடு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் டிஜிட்டல் முறையில் பயிர் சாகுபடி பரப்பு சாகுபடி கணக் கெடுக்கும் பணி இந்த மாத இறுதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன்,வேளாண்மை இணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார், குமுலூர் வேளாண் கல்வி நிறுவன முதல்வர் முனைவர் எஸ்.டி. சிவக்குமார், வேளாண்மை துணை இயக்குனர் செல்வம், மாவட்ட கல்விக்குழு தலைவர் என்ஜினீயர் சிவக்குமார். மாவட்ட செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜபூபதி,நகரமன்ற தலை வர் சிவக்குமார்,துணைத்த லைவர் சுப்புராயலு,நகர செயலாளர் தமிழ்ச்செல்வன், ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.