fbpx
Homeபிற செய்திகள்ஒட்டப்பிடாரம் அருகே மாட்டு வண்டிகள் பந்தயம் ஆனந்த் வண்டிக்கு முதல்பரிசு

ஒட்டப்பிடாரம் அருகே மாட்டு வண்டிகள் பந்தயம் ஆனந்த் வண்டிக்கு முதல்பரிசு

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா மற்றும் வீரசக்கதேவி ஆலய விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. நடுமாடு சின்ன மாடு பூஞ்சிட்டு என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது. பாஞ்சாலங்குறிச்சி ஓட்டப்பிடாரம் பசுவந்தனைச் சாலையில் பந்தயம் நடைபெற்றது நடு மாட்டு வண்டி பந்தயத்தில் 8 வண்டிகளும் சின்ன மாட்டு வண்டி போட்டியில் 13 வண்டிகளும் பூஞ்சிட்டு மாட்டுவண்டி போட்டியில் 26 வண்டியில் பங்கேற்றன. பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய குழு தலைவர் முருக பூபதி தலைமை தாங்கினார்.

மெடிக்கல் விஜயகுமார் முன்னிலையில் மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஸ்வரன் கொடியசைத்து போட்டிகளை தொடக்கி வைத்தார். 14 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற நடு மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசை சிங்கிலிபட்டி ஆனந்த் மாட்டுவண்டியும் இரண்டாவது பரிசை வேலங்குளம் கண்ணன் மாட்டுவண்டியும் மூன்றாவது பரிசை கே. சண்முகபுரம் மெடிக்கல் விஜயகுமார் மாட்டு வண்டியும் நான்காவது பரிசை புதுக்கோட்டை மாவட்டம் பாண்டி பூவந்தி மாட்டுவண்டியும் பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற 9 கிலோமீட்டர் தூர சின்ன மாட்டு வண்டி போட்டியில் கே. சண்முகபுரம் மெடிக்கல் விஜயகுமார் மாட்டுவண்டி முதலிடத்தையும் இரண்டாவது இடத்தை ராமநாதபுரம் மாவட்டம் காடமங்கலம் கவியரசன் மாட்டு வண்டியில் மூன்றாவது இடத்தை மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ராமச்சந்திரன் மாட்டுவண்டியும் நான்காவது இடத்தை கே. சண்முகபுரம் மெடிக்கல் விஜயகுமார் மாட்டு வண்டியும் பெற்றது. ஆறு கிலோமீட்டர் தூரம் நடந்த பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசை சிங்கிலிபட்டி ஆனந்தன் மாட்டு வண்டியும் இரண்டாவது பரிசை கடுகு சந்தை ஆறுதல் இயேசு மாட்டுவண்டியும் மூன்றாவது பரிசை கச்சேரி தளவாய்புரம் ஈஸ்வரன் மாட்டு வண்டியும் பிடித்தன. போட்டி நடைபெற்ற சாலையில் இருபுறமும் ஏராளமானவர்கள் திரண்டு சீறிப்பாய்ந்த காளைகளையும் காளையர்களையும் உற்சாகப்படுத்தி கண்டு களித்தனர்.
போட்டியில் வென்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு மாட்டு வண்டிகளை ஒட்டிய சாரதிகளுக்கும் பரிசு தொகை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வீரபாண்டியபுரம் தொழிலதிபர் அசோக்குமார் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வீரசக்கதேவி ஆலய குழு தலைவர் முருகப் பூபதி செயலாளர் செந்தில்குமார் பொருளாளர் சௌந்தர் சுப்புராஜ் துணைச் செயலாளர் முருகேசன் மற்றும் ஆலய குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img