1 முதல் 5 வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்க நாட்டிலேயே முன்னோடியாக முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை கொண்டுவந்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, மாணக்கர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் தங்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 15.9.2022 அன்று தொடங்கிவைக்கப்பட்டு, குழந்தைகள் பயன்பெற்றனர்.
மேலும், 25.08.2023 அன்று முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ள முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கிவைத்தார்கள்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் சுமார் 2.50 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் வரும் கல்வி ஆண்டு முதல் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பள்ளிக்கல்வியை மேலும் பரவலாக்கவும், கற்றலை இனிமையாக்கவும், எல்லாக் குழந்தைகளும் பசியின்றி கல்வியறிவு பெற்றிடவும் தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு இந்தத் திட்டத்தினை விரிவுப்படுத்தி, கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளான 15.07.2024 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்கள்.
அந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், திருவள்ளூர் மாவட்டம், கீழச்சேரி, புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் 1 முதல் 5 – ஆம்வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கிவைத்ததையடுத்து, கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம் லட்சுமி நாயக்கன்பாளையம் ஸ்ரீராமசாமிநாயுடு வித்யாலயம் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள 22 அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில், இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 608 மாணவ மாணவியர்கள் பயன்பெறுவார்கள்.
நாட்டிலேயே முன்னோடி யாக இத்திட்டம் செயல்படுத்த ப்பட்டுள்ளது. இது ஒரு கனவுத் திட்டம். ஏழைக் குழந்தைகளின் படிப்பை முழுவதுமாக முடிக்க இந்தத் திட்டம் உதவும். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், குழந்தைகள் வெறும் வயிற்றில் இல்லாமல் வகுப்பிற்கு வருவதை உறுதி செய்வது, குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறைப்பது, குழந்தைகளிடையே இரத்த சோகை – இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைப்பது, மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரிப்பது, வேலை செய்யும் பெற்றோரை ஆதரிப்பது மற்றும் அவர்களின் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமை & ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், சேமியா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், அரிசி உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், கோதுமை ரவா உப்புமா காய்கறி சாம்பாரும், செவ்வாய் கிழமை & கிச்சடி வகை ரவா, காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா காய்கறி கிச்சடியும், புதன் கிழமை பொங்கல் வகை ரவா பொங்கல், வெண்பொங்கல் மற்றும் காய்கறிசாம்பாரும், வெள்ளிக்கிழமை & கிச்சடியுடன் இனிப்பு, ரவா, காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா, காய்கறி கிச்சடி, மற்றும் கூடுதலாக ரவா கேசரி, சேமியா கேசரி உள்ளிட்ட காலை உணவுகள் வழங்கப்படுகின்றது.
இத்திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சியில் 121 பள்ளிகளை சேர்ந்த 18,969 மாணாக்கர்களும், மேட்டுப்பாளையம் நகராட்சியில் 11 பள்ளிகளை சேர்ந்த 1232 மாணாக்கர்களும், மதுக்கரை நகராட்சியில் 4 பள்ளிகளுக்கு 898 மாணாக்கர்களும், கூடலூர் நகராட்சியில் 13 பள்ளிகளை சேர்ந்த 790 மாணாக்கர்களும், காரமடை நகராட்சியில் 7 பள்ளிகளை சேர்ந்த 491 மாணாக்கர்களும், கருமத்தம்பட்டி நகராட்சியில் உள்ள 6 பள்ளிகளை சேர்ந்த 383 மாணக்கர்களும், பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள 21 பள்ளிகளை சேர்ந்த 1672 மாணாக்கர்களும், வால்பாறை நகராட்சியில் உள்ள 61 பள்ளிகளை சேர்ந்த 855 மாணாக்கர்களும், பெரியநாயக்கன்பாளையம், சர்க்கார் சாமக்குளம், அன்னூர், சூலூர், தொண்டாமுத்தூர், சுல்தான்பேட்டை, மதுக்கரை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு, ஆனைமலை, காரமடை, மதுக்கரை ஆகிய பேரூராட்சிகளில் உள்ள 751 பள்ளிகளை சேர்ந்த 40266 மாணாக்கர்களும் என மொத்தம் 995 அரசுப் பள்ளிகளை சேர்ந்த 65556 மாணாக்கர்களுக்கு காலை சிற்றூண்டி வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும், தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் அரசு உதவிபெறும் 2 பள்ளிகளை சேர்ந்த 84 மாணாக்கர்களும், ஆனைமலை வட்டாரத்தில் அரசு உதவிபெறும் ஒரு பள்ளியை சேர்ந்த 33 மாணாக்கர்களும், கிணத்துக்கடவு வட்டாரத்தில் அரசு உதவிபெறும் 9 பள்ளிகளை சேர்ந்த 249 மாணாக்கர்களும், பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் அரசு உதவிபெறும் 1 பள்ளியை சேர்ந்த 27மாணாக்கர்களும், பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் அரசு உதவிபெறும் 1 பள்ளியை சேர்ந்த 18 மாணாக்கர்களும், அன்னூர் வட்டாரத்தில் அரசு உதவிபெறும் ஒரு பள்ளியை சேர்ந்த 19 மாணாக்கர்களும், காரமடை வட்டாரத்தில் அரசு உதவிபெறும் 81 மாணாக்கர்களும், சுல்தான்பேட்டை வட்டாரத்தில் அரசு உதவிபெறும் 4 பள்ளிகளை சேர்ந்த 142 மாணாக்கர்களும், சூலூர் வட்டாரத்தில் அரசு உதவிபெறும் ஒரு பள்ளியை சேர்ந்த 15 மாணாக்கர்களும் என மொத்தம் 22 அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 608 மாணாக்கர்களுக்கு காலை சிற்றூண்டி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளிகள், அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகள் என மொத்தம் 1017 பள்ளிகளில் பயிலும் 66,164 மாணவ மாணவியர்கள் காலை சிற்றூண்டி வழங்கப்பட்டு பயனடைந்து வருகின்றார்கள்.
காரமடை ஊராட்சி ஒன்றியம், ஓடந்துரை ஊராட்சி, கல்லார், ஸ்ரீ சற்குரு ஆதிவாசிகள் குருகுல பள்ளியில் படிக்கும் மாணவி அக்ஷனா- வின் தாயார் பகவதி தெரிவித்ததாவது:
என்னுடைய மகள் கல்லாறு ஸ்ரீ சற்குரு ஆதிவாசிகள் குருகுல பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வருகிறாள். எங்கள் வீடு கல்லாறு பகுதியில் உள்ளது. நாங்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். நானும் எனது கணவரும் இளநீர் வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வருகிறோம். தினமும் காலையில் இளநீர் பறிக்க தென்னைந்தோப்புக்கு செல்லவேண்டியது இருப்பதால் நேரமாகவே, வீட்டிலிருந்து காலையில் கிளம்பி என்னுடைய மகளை பள்ளியில் விட்டுவிட்டுதான் போகவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். ஒரு சில நாட்கள் சரியாக சாப்பாடு செய்வதற்குகூட நேரம் இருக்காது. சில நேரங்களில் என் மகள் காலையில் சாப்பிட மிகவும் அடம்பிடிப்பாள், சரியாக சாப்பிடமாட்டாள், சிலநாட்கள் சாப்பிடாமலே பள்ளிக்கு செல்வாள். இது எனக்கு மிகுந்த மனக்கஷ்டத்தை அளித்தது.
இந்நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைத்ததின்மூலம் என் மகள் பள்ளியில் காலை உணவை மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிடும்போது அடம்பிடிக்காமல் முழு உணவையும் விரைவாக சாப்பிடுகிறாள். இதுபோல் தினந்தோறும் ஒவ்வொரு விதமான காலை உணவு வழங்குவதாலும், மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிடுவதாலும், காலை உணவை முழுமையாக சாப்பிட்டு படிப்பில் கவனம் செலுத்துகிறாள். இத்திட்டத்தின் மூலம் என்மகள் தினமும் காலை உணவை முழுமையாக சாப்பிடுவது எங்களுக்கு மனநிம்மதியையும் சந்தோஷத்தையும் அளிக்கிறது.
இத்திட்டத்தை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என் சார்பாகவும், என் மகளின் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஓடந்துரை ஊராட்சி, கல்லார், ஸ்ரீ சற்குரு ஆதிவாசிகள் குருகுல பள்ளியில் படிக்கும் மாணவி மாலிகா வின் தாயார் குணவதி தெரிவித்ததாவது:
என்னுடைய மகள் கல்லாறு ஸ்ரீசற்குரு ஆதிவாசிகள் குருகுல பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறாள். என் கணவர் தூய்மைப் பணியாளராகவும், நான் பாக்குமட்டை தயாரிக்கும் நிறுவனத்தில் கூலி வேலைக்கும் செல்கிறேன். நானும் என் வீட்டுக்காரரும் காலையிலேயே வேலைக்கு சென்றுவிடுவதால். காலைவேளையில் சில நாட்களில் சாப்பாடு செய்து கொடுக்கமுடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. அதுபோன்ற சமயங்களில் என் மகள் சாப்பிடுவதற்கு உணவாக பிஸ்கட், பழங்கள் ஏதாவது கொடுத்து அனுப்புவேன். இது எனக்கு மிகுந்த மனக்கஷ்டத்தை அளித்தது.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைத்ததின்மூலம் என் மகள் பள்ளியில் தினமும் காலை உணவை சாப்பிடுகிறாள். காலை உணவை முழுமையாக சாப்பிடுவதால் படிப்பில் கவனம் செலுத்த முடிகிறது. நன்றாக படிக்கிறாள் . என்மகள் தினமும் காலை உணவை முழுமையாக சாப்பிட்டு நன்றாக படிப்பது எனக்கு மனநிம்மதியையும் சந்தோஷத்தையும் அளிக்கிறது. இத்திட்டத்தை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என் சார்பாகவும், என் மகளின் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.