fbpx
Homeபிற செய்திகள்கோவை நிர்மலா கல்லூரி விழாவில் பேராசிரியர் சூரியநாராயணன் உரை

கோவை நிர்மலா கல்லூரி விழாவில் பேராசிரியர் சூரியநாராயணன் உரை

கோவை நிர்மலா மகளிர் கல்லூரி தமிழ்த்துறை அரசு உதவி பெறும் பிரிவு 24.07.2024 அன்று நடத்திய அறிமுக விழா, கல்லூரியின் செயலர் அருட் சகோதரி முனைவர் குழந்தைதெரேஸ், முதல்வர் அருட்சகோதரி முனைவர் மேரி பபியோலா, தலைமையில் நடந்தது. தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் ப.மகேஸ்வரி வரவேற்றுப் பேசினார்.

இவ்விழாவில் இலக்கியப் பேச்சாளர் பேராசிரியர் முனைவர் சூரிய நாராயணன், கவிஞரும் கவிதையும் எனும் தலைப்பில் பேசி, ஆசிரியர் வழிகாட்டுதலுடன், தடைகளைத் தகர்த்து முயன்றால் வாழ்வில் வெற்றி கிடைக்கும் என்று மாணவிகளை தனது சொல்லாற்றலாலும், நடிப்புத் திறத்தாலும் ஊக்கப்படுத்தினார்.

அன்பின் வழியே வெளிப்படுவது கவிதை, கவிதையின் வழியே வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. அப்பிரதிபலிப்பின் வெளிப்பாடாக அமையும் கவிதையானது கவிஞனோடு இணையும் போது கவிதை மிளிர்கிறது என்பதை கண்ணதாசன் முதல் ந.முத்துக்குமார், கவிதை வழி எடுத்துரைத்தார்.

விழா ஏற்பாடுகளை தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் சிறப்புற செய்திருந்தனர்.
700க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img