Homeபிற செய்திகள்புத்தம் புதிய டிவிஎஸ் ஜூபிடர் 110 கோவையில் அறிமுகம்

புத்தம் புதிய டிவிஎஸ் ஜூபிடர் 110 கோவையில் அறிமுகம்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது புத்தம் புதிய டிவிஎஸ் ஜூபிடர் 110-ஐ கோவையில்  அறிமுகப்படுத்தியது. 

கோவையில் நடந்த அறிமுக விழாவில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் கம்முட்டர் மார்க்கெட்டிங் அசோசியேட் வைஸ் ப்ரெசிடெண்ட் பினாய் ஆண்டனி, டிவிஎஸ் மோட்டார்ஸ் தமிழ்நாடு ரீஜனல் சேல்ஸ் மேனேஜர் பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டனர். டிவிஎஸ் ஜூபிடர் 110 ஸ்கூட்டரில் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்திலான இன்ஜின் மற்றும் இவ்வாகனப் பிரிவிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படும் அம்சங்கள் மற்றும் பல சிறப்பம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 

இதில் கம்முட்டர் பிசினஸ் பிரிவின் மூத்த துணைத் தலைவர் மற்றும் கார்ப்பரேட் பிராண்ட் & மீடியா பிரிவின் தலைமை நிர்வாகியுமான அனிருத்தா கூறுகையில்,  

“புத்தம் புதிய டிவிஎஸ் ஜூபிடர்  ஓட்டும் போது தேவைக்கேற்ப முறுக்குவிசையை வழங்குகிறது. இதில் இடம்பெற்றிருக்கும் முன்னோடித்துவமிக்க தொழில்நுட்பமானது, இதற்கு முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது 10% கூடுதல் மைலேஜ்ஜை அளிக்கிறது.  

முழுவதுமாக டிஜிட்டல் ப்ளுடூத் தொழில்நுட்பத்தினால், இயங்குவதால் குரல் அழைப்பு மற்றும் SMS, செல்லுமிடங்களுக்கான பாதையை தெரிந்து கொள்ள உதவுகிறது” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img