fbpx
Homeபிற செய்திகள்சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் புதிய நூல்கள் வெளியீட்டு விழா

சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் புதிய நூல்கள் வெளியீட்டு விழா

சிந்தனை கவிஞர் கவிதாசனின் புதிய நூல்கள் வெளியீட்டு விழா காந்திபுரத்தில் உள்ள ஆர்.வி.ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் வெற்றி முழக்கம், வெற்றியின் ஓசை, துணிந்தால் சாதிக்க முடியும் மற்றும் சிந்தனை கவிஞர் கவிதாசனின் நூல்களை பகுப்பாய்வு செய்து ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் த.விஸ் வநாதன் எழுதிய பன்முக ஆய்வு கட்டுரைகள் என நான்கு நூல்கள் வெளியிடப்பட்டன.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் கே.கார்த்திகேயன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழாவிற்கு வந்திருந்தவர்களை கோவை, பயனீர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர், முனைவர் க.முருகேசன் வரவேற்றார்.

முதல் பிரதியை கோவை பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் ஆர்.ராஜவேல் வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அதனை கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல் லூரி முதல்வர் மற்றும் செயலாளர் முனைவர் பி.எல்.சிவகுமார் பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினர். வெற்றியின் ஓசை, வெற்றி முழக்கம், துணிந்தால் சாதிக்க முடியும் மற்றும் பன்முக ஆய்வு கட்டுரைகள் ஆகியவற்றின் நூல் அறிமுக உரையை முறையே கோவை, மேட் டுப்பாளையம், சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியின் தமிழாசிரியர் முனைவர் ஜி.கருணாநிதி, கோவை கவிஞர் மீ.உமா மகேஸ்வரி, பொள்ளாச்சி இலக்கிய வட்ட செயலாளர் கவிஞர் இரா.பூபாலன் மற்றும் கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் த.விஸ்வநாதன் ஆகியோர் வழங்கினர்.

முடிவில் இதுவரை 90க் கும் மேற்பட்ட நூல்கள் எழுதிய கவிஞர் கவிதாசன் ஏற்புரை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img