fbpx
Homeபிற செய்திகள்ஐந்து ஆண்டுகளில் கரூர் மாவட்டத்தில் 5100- கோடி ரூபாய்க்கு வளர்ச்சி திட்ட பணிகள் கரூரில் செந்தில்...

ஐந்து ஆண்டுகளில் கரூர் மாவட்டத்தில் 5100- கோடி ரூபாய்க்கு வளர்ச்சி திட்ட பணிகள் கரூரில் செந்தில் பாலாஜி பேட்டி

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

கரூர் திமுக கட்சி அலுவலகமான அறிவாலயத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது எம்எல்ஏக்கள் இளங்கோ, சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

செய்தியாளர்களிடம் செந்தில் பாலாஜி கூறியதாவது:

தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியில் கரூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை இல்லாத அளவிற்கு பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப் பட்டுள்ளன.

கரூரில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம், ரூ.38.5 கோடி மதிப்பீட்டில் டைடல் பார்க், ரூ.134 கோடி மதிப்பீட்டில் கரூர் கோவை நான்கு வழி சாலை விரிவாக்கம், ரூ.101 கோடி மதிப்பீட்டில் நெரூர்-உன்னியூர் காவிரி ஆற்றின் குறுக்கே உயர் மட்ட போக்குவரத்து பாலம், ரூ.62.5- கோடி மதிப்பீட்டில் ஈரோடு சாலை விரிவாக்கம், ரூ.6.75 கோடி மதிப்பில் கரூர் காமராஜ் மார்க்கெட், ரூ.6.90 கோடி மதிப்பீட்டில் மாவட்ட நூலகம், ரூ.5.91 கோடி மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா, ரூ.5 கோடி மதிப்பீட்டில் அரவக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லூரி, மேலும் கரூரில் மீன் மார்க்கெட், நீச்சல் குளம், கல்லூரிக்கு கூடுதல் வகுப்பறை, பாதாள சாக்கடை, குடிநீர் திட்டங்கள், சிப்காட் தொழில் வளாகம் என பல்வேறு துறைகளின் வாயிலாக வளர்ச்சி திட்ட பணிகள், மேலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் என ரூ.5100-கோடி அளவிற்கு திராவிட மாடல் அரசு நிதிகளை வழங்கி வளர்ச்சி திட்ட பணிகளை சிறப்பாக செய்துள்ளது.

இன்னும் கரூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதால் வரும் தேர்தலில் மக்கள் திமுக தலைமையிலான அரசை மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img