கோவை அவிநாசி ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் அதிகளவு சென்று வருகின்றன.
இந்த நிலையில் ஒரு வயதான மூதாட்டி அந்த மேம்பாலத்திற்கு மேல் சென்று உள்ளார். அப்போது அதி வேகமாக வந்த இருசக்கர வாகனம் அந்த மூதாட்டி மீது மோதி, இடித்து தள்ளி விட்டு நிற்காமல் சென்று உள்ளது.
இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. காயம் அடைந்த மூதாட்டி தற்பொழுது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இடித்து விட்டு சென்ற இருசக்கர வாகன ஓட்டி மீது ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
அந்த வயதான மூதாட்டி சற்று மனநலம் சரியில்லாதவர் எனக் கூறப்படுகிறது.



