கோவையைச் சேர்ந்த பிஎன்சி மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய ஷோரூமை ஈரோட்டில் திறந்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது இங்கு திறக்கப்பட்டுள்ள இந்த ஷோரூம் இந்நிறுவனத்தின் 12வது ஷோரூம் ஆகும். இது 310/1 வேலன் அரங்கம், வீரப்பம்பாளையம் பைபாஸ், ஈரோடு, தமிழ்நாடு, 638012 என்ற முகவரியில் திறக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் வகையில் இந்நிறுவனம் பல்வேறு நகரங்களில் புதிய ஷோரூம்களை தொடர்ந்து திறந்து வருகிறது.
இந்த புதிய ஷோரூமை திண்டல் வெள்ளாளர் இன்ஸ்டிடூஷன் செயலாளர் எஸ்.டி. சந்திரசேகர், ஷாலிமார் ஏஜென்சீஸ் நிறுவனர் மற்றும் தலைவர் வி. புருஷோத்தமன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
திறப்பு விழாவையொட்டி சிறப்பு சலுகையாக இந்நிறுவனத்தின், சேலஞ்சர் எஸ்110 மின்சார வாகனம் 99,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் இதன் சேலஞ்சர் எஸ்125 வாகனம் 1,45,000க்கு கிடைக்கிறது.
இதன் பிஎன்சி சேலஞ்சர் எஸ்110 வாகனம், இந்தியாவில் உள்ள முன்னணி 150சிசி வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இதன் சக்கரமானது 1354 மிமீ உடன் சிறப்பான பயணத்திற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.