fbpx
Homeபிற செய்திகள்சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் ஐம்பெரும் விழா

சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் ஐம்பெரும் விழா

சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் முத்தமிழ் விழா, விளையாட்டு விழா, மாணவர் ஆளுமை திறன் செயல்பாட்டு விழா, நுண்கலை விழா, கல்லூரி ஆண்டு விழா ஆகிய ஐம்பெரும் விழா 3 நாட்கள் நடந்தது. முதல் நாள் விழாவிற்கு கல்லூரி முதல்வர் இரா.சின்னத்தாய் தலைமை தாங்கினார். பேராசிரியர் அருள்முகிலன், உடற்கல்வி இயக்குனர்கள் மதியழகன், ஸ்டெல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் துறை தலைவர் திருநாவுக்கரசு அனைவரையும் வரவேற்றார். சிவகுருநாதபுரம் இந்து நாடார் மகமை கமிட்டி டிரஸ்ட் நாட்டாண்மை எஸ். தங்கையா நாடார் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக திருநெல்வேலி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் இரா. பாஸ்கரன், சேலம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் நா. காந்திமதி, திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி இணைப் பேராசிரியர் ஸ்ரீமதி, தெற்கு ரயில்வே விளையாட்டு வீரர் நிகில்சிற்றரசு ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து தமிழ் துறை கௌரவ விரிவுரையாளர் கார்த்திகா எழுதிய பாரியின் பரம்பு நூல் வெளியீடு நடந்தது. நிறைவு நாளன்று நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி திருமண்டல லே செயலாளரும் தொழிலதிபருமான டி.எஸ். ஜெயசிங், ஆலங்குளம் துணை சூப்பிரண்டு ஜெயபால் பர்ண பாஸ், சுரண்டை எஸ்.ஆர் பள்ளி நிர்வாகி சிவபபிஷ்ராம், இலஞ்சி டி.டி.டி.ஏ டேனியல் ராஜம்மாள் கல்வியில் கல்லூரி தாளாளர் வே. ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினர். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் வீரபத்திரன், மோகன கண்ணன், செல்வகணபதி, ஸ்டீபன் டேவிஸ், கிருஷ்ணகுமார், வசந்தா உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முடிவில் பேராசிரியர் சித்திரைகனி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img