fbpx
Homeபிற செய்திகள்சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் 'ஏப்ரல் கூல் டே' அனுசரிப்பு

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் ‘ஏப்ரல் கூல் டே’ அனுசரிப்பு

கோவை பகுதியில் அமைந்துள்ள மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்து கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில், 01-04-2024 திங்கட்கிழமையன்று, ‘ஏப்ரல் கூல் டே’ அனுசரிக்கப்பட்டது.

மாணவ சமுதாயத்தினரிடம் சுற்றுச்சூழல் மாசுபாடு, மரம் வளர்ப்பு ஆகியனவற்றைப் பற்றிய விழிப்புணர்வினை உண்டாக்கும் வகையில், பள்ளியின் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில், பள்ளி வளாகத்தில் ‘ஏப்ரல் கூல் டே’ நிகழ்வு நடத்தப்பட்டது. மாணவ மாணவியர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். எட்டாம் வகுப்பைச் சேர்ந்த என்.சுதர்ஷனா மற்றும் பி.பி. பரணி வேந்தன் ஆகியோர் ஏப்ரல் ஒன்றாம் நாளினை மரங்களை நட்டு வளர்க்கத் தொடங்கும் நாளாகவும், சுற்றுச்சூழலைக் காக்க உறுதி ஏற்கும் நாளாகவும் டாடப்பட வேண்டியதன் அவசியத்தைப் பற்றிப் பேசினர். தொடர்ந்து மாணவ மாணவியர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளைப் பள்ளி வளாகத்தில் நட்டு வைத்தனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய, பள்ளிச் செயலர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன், “இயற்கையைப் பாதுகாப்பது பள்ளி மாணவ மாணவியரின் கடமைகளுள் ஒன்று ஆகும். எனவே, ஏப்ரல் மாத முதல் நாள் முட்டாள்கள் தினமாகக் கொண்டாடுகின்ற வழக்கத்திற்குப் பதிலாக, அந்த நாளில் மரங்களை நட்டு வைத்து, நாம் வாழும் சுற்றுப்புறத்தைப் பசுமையாகவும், குளிர்ச்சி நிறைந்ததாகவும் மாற்றுகின்ற நோக்கில், நம் பள்ளியில் ஏப்ரல் 1 ஆம் நாளினை ‘ஏப்ரல் கூல்’ தினமாகக் கொண்டாடி வருகிறோம். நம் பள்ளி வளாகத்தில் மட்டுமே 1800க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. அவற்றில் மருத்துவ குணம் மிக்க மரங்கள் மற்றும் தாவரங்கள் பல உள்ளன. நம் பள்ளியில் பயில்கின்ற மாணவ மாணவியர் தங்களின் பிறந்த நாளன்று மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகின்றனர். நாம் ஒவ்வொருவரும் மரங்களை நட்டு வளர்ப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். ஏப்ரல் 1 ஆம் தேதியை மரங்களை நட்டு வளர்க்கத் தொடங்கும் ங்கும் நாளாகக் கொண்டாடுவோம். நமது பூமியைக் குளிர்ச்சி மிக்கதாக மாற்றுவோம்” என்று பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னதாக, மாணவ மாணவியர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். அத்துடன் மரம் வளர்ப்பு பற்றிய பதாகைகளைக் கைகளில் ஏந்தி விழிப்புணர்வினை ஏற்படுத்தினர். பள்ளியின் கல்வி ஆலோசகர் டாக்டர் வெ.கணேசன், பள்ளி முதல்வர் டாக்டர் இரா. உமாமகேஸ்வரி, துணை முதல்வர் முனைவர் Dr.சக்திவேலு மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளைப் பள்ளியின் சூற்றுச்சூழல் மன்ற ஆசிரியர்கள், திரு.ப.முருகேசன், திருமதி.ஜெயலட்சுமி மற்றும் பராமரிப்புத்துறையைச் சேர்ந்த திரு.கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்

படிக்க வேண்டும்

spot_img