விவேகானந்தா குளோபல் அகாடமி பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்வின் சிறப்பம்சமாக, அனைத்து 1, 2 ஆம் வகுப்பு மாணவர்கள் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரைப் போன்று வேடம் அணிந்து வந்தார்கள்.
பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பல்வேறு போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
பாரதியார் பாடல்கள், கவிதை பாராயணம், நடனம், உரையாடல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று அனைவரையும் கவர்ந்தன.
பள்ளி முதல்வர், நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் என அனைவரும் இணைந்து நிகழ்வை சிறப்பித்தனர். குழந்தைகளின் திறமைகளைப் பாராட்டி பாரதியார் விடுத்துச் சென்ற தேசப்பற்று, சமுதாய சேவை, பெண் மரியாதை போன்ற உயர்ந்த கருத்துகளை பின்பற்றி வளர வேண்டுமென்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். இவ்விழா தேசப்பற்று ஊட்டுவதாக அமைந்தது.



