பாங்க் ஆப் பரோடா கோவை பிராந்திய அலுவலகம், கிணத்துக்கடவு கிளையில் தமிழ்நாடு மாநில அரசு சம்பளத் தொகுப்புத் திட்டத்தின் (TNSGSP) கீழ், தனது சம்பளக் கணக்கைப் பராமரித்து வந்த ஊழியர் வினீத் மரணமடைந்தார். இதனையடுத்து அவரது குடும்பத்திற்கான இழப்பீட்டு தொகை ரூ.15 லட்சத்திற்கான காசோலையை வாரிசுதாரரிடம் வங்கியின் பிராந்திய மேலாளர் ஆர்.கமலகண்ணன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் வழங்கியபோது எடுத்தபடம். அருகில் முதன்மை மேலாளர் குமரகுரு உள்ளார்.



