கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில், தமிழ்த்துறை சார்பாக பாரதியார் நினைவுநாள் விழா உயர்தொழில்நுட்பக் கூட அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.பிரியதர்சினி வரவேற்புரை ஆற் றினார். தொடர்ந்து கலை மற்றும் சமூக அறிவியல் புல முதன்மையர் முனைவர் சசிபிரபா ஜெயின் தலைமையுரை ஆற்றினார். அவர் பேசும்போது, பாரதியார் தமிழ்மொழி மறுமலர்ச்சியின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் என்றும் சூரியக்கதிர்கள் புகமுடியாத இடத்தில் கூட ஒரு கவிஞனின் கவியானது ஊடுருவிச்சென்று மனதில் பதிய வைக்கும். அவ்வகையில் மகாகவி பாரதியார் தமது கவிதைகளின் வழி பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், சாதி, சமய வேறுபாடின்றி நல்லிணக்கக் கருத்துக்களுக்கும் வித்திட்டவர் என்றும் குறிப்பிட்டார்.
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித் துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் ய.மணிகண் டன் ‘ஞாயிற்றை சங்கிலியால் அளக்கலாமோ’ என்னும் பொருண்மை யில் சிறப்புரை ஆற்றினார். அவர்தம் உரையில், பாரதியார் தமது கவிதை களில் இந்திய நாட்டை முழுவதும் ஒருங்கிணைக் கப்பாடுபட்டவர் என்றும் புதுக்கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்து கவிதைகளில் வடிவம் மற்றம் கருத்துப் புரட்சியை உருவாக்கியவர் என்றும் விதவை மறுமணம், வரதட்சணைக் கொடுமை, பாலியல் விவாகம் குறித்தும் உரையாற்றினார்.
மேலும் சாதி மதத்தை கடந்தவர் பாரதி என்றும் தான் எழுதியதைப் போல வாழ்ந்தவர் என்றும் உலகத்தில் உள்ள சிற்பக்கலை, ஓவியக்கலை, கட்டிடக்கலை போன்ற அனைத்துக் கலைகளும் கூடி இருக்கின்ற ஒரே இடம் தமிழ்நாடு என்றும் ‘வையத் தலைமைகொள்’ என்ற பாரதியாரின் கவிதை வரிகளுக்கு இணங்க மாணவிகள் அனைவரும் நாளைய இந்தியாவின் அடையாளமாகவும் ஞாயிற்றின் ஒளி போல ஒளிரவும் கல்வியில் தலைச்சிறந்து விளங்கவும் வேண்டும் என்றும் அவர் தன்னுரையில் தெரிவித்தார்.
நிகழ்வில் தமிழ்த்துறை உதவிப்பேரா சிரியர் முனைவர் மு.கவிதா நன்றி கூறினார். இவ்விழாவில் பிற துறை பேராசிரியர்களும் மொழிப்பாடம் சார்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவிகளும் கலந்து கொண்டனர்.



