Homeபிற செய்திகள்நிர்மலா மகளிர் கல்லூரியில் ‘பாரதி நினைவுநாள் விழா’

நிர்மலா மகளிர் கல்லூரியில் ‘பாரதி நினைவுநாள் விழா’

கோவை, நிர்மலா மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை யின் (அரசு உதவி பெறும் பிரிவு) சார்பில் மகாகவி பாரதியாரின் நினைவு நாளையொட்டி “பாரதி நினைவு நாள் விழா” வையம் தலைமை கொள் என்னும் தலைப் பில் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் செயலர் அருட்சகோதரி முனைவர் குழந்தை தெரேஸ் மற்றும் முதல்வர் அருட்சகோதரி முனைவர் மேரி பபியோலா ஆகியோர் வாழ்த்துதலுடன் விழா தொடங்கியது.
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மகேஸ்வரி.ப வர வேற்புரை ஆற்றினார். இவ்விழாவில் தமிழ் இலக்கிய கருத்துக்களத்தின் பேச்சுப் பட்டறை தலைவர் டி.ஜே.ஸ்ரீராம் ஆதித்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, “வையம் தலைமை கொள்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.அப்போது அவர், பாரதியாரின் கவிதைகளில் உள்ள வேகம், சமத்துவம், அவர் காலத்தில் பெண்மை, மற்றும் வ.வே.சு. ஐயரின் குளத்தங்கரை அரச மரத்தின் கதை வழி சமூக ஏற்றத்தாழ்வு, எஸ்.இராமகிருஸ்ணனின் சஞ்சாரம் கதை வழி நாதசுவரக்கலைஞர்களின் வாழ்வியல் மற்றும் பாரதிக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் ஒளி படைத்த கண்ணினாய் வா..வா..வா என்னும் பாடலை அனைவரையும் பாட வைத்துத் தம் உரையை நிறைவு செய்தார்.
விழாவின் இறுதியில் தமிழ்த்துறையின் உதவிப்பேராசி ரியர் முனைவர் சு.இராம திலகம் நன்றி நவின்றார். இருநூற்றுக்கும் மேற்பட்ட இளநிலை முதலாமாண்டு மாணவியர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img