fbpx
Homeபிற செய்திகள்பான்பிகோ பின்டெக் மென்பொருள் நிறுவனம் - கோவையில் விரிவாக்கம்

பான்பிகோ பின்டெக் மென்பொருள் நிறுவனம் – கோவையில் விரிவாக்கம்

லண்டனை தலைமையக மாகக் கொண்ட பின்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான பான்பிகோ, கோவை பீளமேட்டில் தனது புதிய அலுவலகத்தை திறந்து செயல்பாடுகளை விரிவுபடுத்துவதாக அறிவித்தது.
ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட வங்கிகளுக்கு சேவை வழங்கும் இந்த வளர்ந்து வரும் நிறுவனத்தின் விரிவாக்க நிகழ்ச்சி முக்கிய அரசியல் தலைவர்களின் முன்னிலையில் கோவையில் நடைபெற்றது.

அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினரான எஸ்.பி.வேலு மணி நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜுன், கே.ஆர்.ஜெயராம், அதிமுக ஒன்றிய செயலாளர் கார்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

பான்பிகோவின் உலகளா விய தலைமை நிர்வாக அதிகாரி கண்ணன் ராசப்பன் மற்றும் மூத்த இயக்குனர் டி.செல்வாம்பிகை ஆகியோர் விழாவிற்கு தலைமை தாங்கி விருந்தினர்களை வரவேற்றனர்.
விழாவில் பேசிய எஸ்.பி. வேலுமணி பான்பிகோவின் மென்பொருள் தயாரிப்புகள் இந்தியாவின் யுபிஐ (UPI) முறைமைக்கு இணையா னது என்றும், நிறுவனத் தின் ஓபன் பாங்கிங் மென் பொருள் தீர்வுகள் வங்கித் தொழில்நுட்பத்தின் சமீபத்திய பரிணாமம் என் றும் குறிப்பிட்டார். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் தொடங்கப்பட்ட நிறு வனம் இன்று முக்கிய உலக வங்கிகளுக்கு சேவை வழங்கும் அளவிற்கு வளர்ந்துள்ளதை அவர் பாராட்டினார்.
கோவையின் தொழில் முனைவு பாரம்பரியத்தையும், தகவல் தொழில்நுட்பத் துறையில் அதன் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார். கோவையின் தரமான கல்வி மற்றும் கலாச்சார மதிப்புகள் தொடர்ந்து முக்கிய நிறுவனங்களை நமது நகரத்திற்கு ஈர்த்து வருகிறது, என்று அவர் தெரிவித்தார்.

கண்ணன் இராசப்பன் பேசுகையில் இந்த விரிவு படுத்தப்பட்ட அலுவலகம் 2025 வரை பான்பிகோவின் வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவும் என்று அறிவித்தார். தற்போது கோவையில் 50 பணியாளர்களைக் கொண்ட நிறுவனம், உள்ளூர் கல் லூரிகளில் தொடர்ந்து வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துவதுடன், அனுபவம் வாய்ந்த நிபுணர்களையும் பணியமர்த்தும். “கோவையி லிருந்து எங்கள் உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு புது மையான, நவீன மென்பொருள் தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்,” என்று தெரிவித்தார்.

பான்பிகோ லண்டன் (UK), பிராங்க்ஃபர்ட் (ஜெர்மனி), சாவோ பாலோ (பிரேசில்), ரியாத் (சவுதி அரேபியா), மும்பை மற்றும் கோவையில் அலுவலகங் களைக் கொண்ட ஒரு பின் டெக் ஸ்டார்ட்அப் ஆகும். இந்த நிறுவனம் உலகெங்கிலும் உள்ள நிதி நிறுவனங்களுக்கான ஓபன் பாங்கிங் மென்பொருள் தீர்வுகளில் சிறப்பு பெற்றது.

படிக்க வேண்டும்

spot_img