fbpx
Homeபிற செய்திகள்மண்ணை காக்க வேண்டும் கோவையில் விழிப்புணர்வு பேரணி

மண்ணை காக்க வேண்டும் கோவையில் விழிப்புணர்வு பேரணி

உலக மண் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

உலக மண் தினத்தை முன்னிட்டு வேளாண் துறை சார்பில் மண்ணை காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மண்ணியல் துறை சார் பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் இலவச மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தாவர வியல் பூங்காவில் துவங் கிய இந்த பேரணியை துணைவேந்தர் (பொறுப்பு) தமிழ்வேந்தன் கொடி யசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ் வில் நூற் றுக்கும் மேற் பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு மண்ணை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி முழக்க மிட்டபடி சென்றனர்.

இந்த நிகழ்வில் மண்ணி யல் மற்றும் வேளாண் வேதியல் துறை தலைவர் செல்வி, இயற்கை வள மேலாண்மை இயக்குனர் பால சுப்பிரமணியம் மற்றும் பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அவ்வழியாக வந்த பொது மக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

அதனைப் பார்த்த பொதுமக்கள் பலரும் அவர்களுக்கு பிடித்த மரக் கன்றுகளை இலவசமாக எடுத்துச் சென்றனர்.

படிக்க வேண்டும்

spot_img