உதகை, நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் மாவட்ட கூட்டுறவு இயக்கத்தின் தந்தை ராவ்பகதூர் ஆரிகவுடரின் 132 வது பிறந்தநாள் விழா கூட்டுறவுத் துறையின் சார்பாக நேற்று கொண்டாடப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு, ஆரிகவுடர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்க மேலாண்மை இயக்குநர் முத்துக்குமார், துணைப் பதிவாளர்கள் அஜித்குமார், சி.அய்யனார், ராஜா, கமல் சேட், ரவிக்குமார், கூட்டுறவு சார்பதிவாளர் சந்தியா, நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் ரா.கௌரிசங்கர், கூட்டுறவு சார்பதிவாளர்கள், ஆரி கவுடரின் குடும்ப உறுப்பினர்கள், விவசாய பெருமக்கள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்கள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் திரளாக பங்கேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினர்.



