2025 ஆம் ஆண்டு பிஎஸ்ஜி தொழில்நுட்பக்கல்லூரியின் கணிப்பொறிமற்றும் தொடர்பு டைய பொறியியல் துறைகளின் (உயிர்மருத்துவ பொறியியல், உயிரியல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் மற்றும் பொறியியல், மற்றும் தகவல் தொழில்நுட்பம்) இளங்கலை மற்றும் முதுகலைப்பட்டதாரி களுக்கான விருது வழங்கும் விழா, நேற்று (18 ஆம்தேதி) காலை 10.15 மணிக்கு பிஎஸ்ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அரங் கத்தில் நடைபெற்றது.
பிஎஸ்ஜி அண்ட் சன்ஸ் அறக்கட்டளைகளின் நிர்வாக அறங்காவலர் எல். கோபால கிருஷ்ணன் இந்தநிகழ் வில் கலந்து கொண்டு சிறப்பித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர்கே. பிரகாசன் தலைமையுரையாற்றினார். மற்றும் 2024-2025 கல்வியாண் டில் மாணவர்கள் பெற்ற சாதனைகளை அவர் எடுத்து ரைத்தார். முக்கிய விருந்தினராக டெல்லி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் யோகேஷ்சிங் பங்கேற்று விருது விழா உரையை வழங்கினார்.
பிஎஸ்ஜி டெக் தனது 1951 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட காலம்முதலே நாட்டிற்கும் கல்விக்கும் பெரும் பங்களிப்பு செய்திருப்பதை எடுத்துக்காட்டி, அதற்கான வழிகாட்டுதலை வழங்கும் முதல்வர் டாக்டர் கே. பிரகாசனின் முயற்சியையும் துணைவேந்தர் பேராசிரியர் யோகேஷ்சிங் பாராட்டினார்.
படிப்பு என்பது ஒருமுடி வல்ல, வாழ்க்கையின் தொடக் கமே என அவர் வலியுறுத்தி னார். நிலை, செல்வம் மட்டுமல்லாமல், பணிவும், பணியாற்றும் மனப்பாங்கும், நேர்மையும் ஒருவரின் உண்மை யான வெற்றியை நிர்ணயிக்கின்றன எனவும் தொழில்நுட்ப அறிவுடன் வாழ்க்கை முறைத்திறன்களும், அறத்தையும் பின்பற்றும் வாழ்வியலையும் இணைத்தே வெற்றிபெற முடியும் என்றும் அவர் மேலும் அறிவுறுத்தினார்.
2047ஆம் ஆண்டிற்குள் $25 டிரில்லியன் பொருளா தார இலக்கை நோக்கி இந்தியா செல்வதற்கு, இன்றைய பட்ட தாரிகள் தொழில் முனைவோர், கண்டுபிடிப்பாளர்களாக வேண்டும் எனத்தெரிவித்தார். வெளிநாட்டில் வாய்ப்புகளை நாடலாம், ஆனால் மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி, பங்களிக்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.
இறுதியில், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் தேசியநலனுக்காகசெயல்பட, கல்வியை பிறரை உயர்த்த பயன்படுத்த, மற்றும் தங்களது வெற்றியை தர்மபுருஷார்த்தம் என வரையறுக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.



