நீலகிரி மாவட்டம் உதகை அரசு பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் துவக்கி வைத்தார்.
ஆட்சியர் பேசியதாவது: தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும் காலந்தோறும் ஏற்றப்பட்ட மாற்றங்கள் குறித்த புரிதலையும், வளரும் தலைமுறையினருக்கு முழுமையாகக் கொண்டு செல்ல பண்பாட்டின் முக்கிய கூறுகளான கலை, இலக்கியம், கல்வி இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறை ஆகியவற்றை அவர்களுக்கு உணர்த்துவது சமூகத்தின் கடமையாகும். இதற்காகத்தான் இந்த பரப் புரை திட்டத்தை அரசு முன் னெடுத்துள்ளது.
எனவே, 100 கல்லூரிகளில் தமிழர் மரபும்-நாகரிகமும், தமிழ்நாட்டில் சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூக பொருளாதார முன்னேற்றம், திசை தோறும் திராவிடம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி தொழில் முனைவுக்கான முன்னெடுப்புகள், ஊடகங்களின் தோற்றமும், வளர்ச்சியும், கணினி தமிழ் வளர்ச்சியும் சவால்களும், தமிழ் நாட்டில் சுற்றுலா வாய்ப்புகள், நூற்றாண்டு கண்ட கல்வி புரட்சி மற்றும் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்படுத்தும் முறைகள் ஆகிய தலைப்புகளின் கீழ் அனைத்து பேச்சாளர்களையும் ஒருங்கிணைத்து மாணவர்களி டையே என்னென்ன தலைப்பில் பேச வேண்டும் என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டம் வாரியாக இந்நிகழ்ச் சியினை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்திற்கு இரண்டு பேச்சாளர்கள் வந்துள் ளனர். அவர்கள் கூறும் கருத் துகளை மனதில் நிறுத்தி பயன் பெற வேண்டும் என்றார்.
“குறிஞ்சியில் தொடங்கிய பயணம்” என்ற தலைப்பில் எழுத்தாளர்
ச.தமிழ்ச்செல்வன் பேசியதாவது:
குறிஞ்சி நிலம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். மலையும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி என்றழைக்கப்படும். இதற்கு சொந்தமானவர்கள் மலைவாழ் மக்கள். உலகத்திலேயே எந்த மொழியிலும் நிலத்தினை ஐந்து வகையாக பிரித்துக் கொண்ட சமூகம் இல்லை.
தமிழக மக்கள் மட்டும் தான் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகை நிலங்களாக பிரித்து, அதற்கேற்றவாறு தொழில் வாழ்க்கை, வழிபாட்டு முறை, பண்பாடு என பிரித்துக் கொண்டவர்கள். இப்பேற்பட்ட புரிதலோடு வளர்ந்த சமூகம் என்பது தமிழர்க ளின் சமூகமாகும். அதன் வரலாற் றினை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
வரலாறு என்பது பழமை வாய்ந்த கதை அல்ல. வரலாறு என்பது இன்றும் வாழக்கூடிய நமது பிரச்சினையினை தீர்க்கக்கூடிய ஒரு வரலாறு ஆகும். அன்றைய வாழ்க்கை முறை எல்லாம் எல்லோருக்கும் சொந்தம். தனி உடமை என்று எதுவும் கிடையாது.
எனவே, இன்றைய தலைமுறையினர் தமிழரின் இந்த வரலாறு மற்றும் பண்பாட்டினை தெரிந்து கொண்டு அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.
“உலகம் யாவையும்”
“உலகம் யாவையும்” என்ற தலைப்பில் எழுத்தாளர்-இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் பேசியதாவது:
கல்வி என்பது உடல், மனம், அறிவு, நல்லொழுக்கம் ஆகியவற்றுடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பாகும். இளைய தலைமுறையினரை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாய பங்களிப்பில் முக்கிய பங்கு வகிக்கச் செய்வதிலும் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது.
கல்வி கற்பதன் மூலம் நல்லதொரு திறமை, நடத்தை போன்றவற்றினை தந்து, தொழில்கள், உயர் தொழில்கள் போன்றவற்றை பெற்று வாழ்வில் ஒரு முழு மனிதாக மாற்றும்.
மனிதன் தனது கருத்தை வெளிப்படுத்துவற்குக் கிடைக்கும் ஒப்பற்ற கருவி மொழி. மொழிதல் என்றால் சொல்லுதல் என்று பொருள். மனதின் ஏதாவது ஒன்றை சிந்திப்பதும் மொழியின் ஒரு நிலை ஆகும். பேசப்படுவதும், கேட்கப்படுவதுமே உண்மையான மொழி ஆகும்.
தமிழர்களின் புகழ், வீரம், மானம், விருந்தோம்பல், பொதுநலம் ஆகி யவை தமிழ்ப்பண்பாட்டின் அடிப்படைகளாக அமைந்துள்ளன. நல்லிணக்கம், மனிதநேயம் போன்ற நல்ல இயல்புகளை சமயங்கள் மக்களிடையே பரப்பி, தமிழ்ப்பண்பாட்டை வளர்த்தன.
கல்வி, மொழி, பண்பாடு நோக்கி பயணித்தால் நிச்சயமாக வெற்றி பெற முடியும். தமிழர்கள் மட்டும் தான் அழுகின்றபோதிலும் பண்பாட்டினை வெளிப்படுத் துகிறார்கள். தாய்மொழியினை தவறில்லாமல் எழுத, பேச, படிக்க கற்றுக் கொள்வது இன்றைய தலைமுறையினருக்கு அவ சியமான ஒன்றாகும்.
எனவே, மாணவர்கள் தினந்தோரும் படிக்கும் பழக்கத்தினை கடை பிடித்து தங்களது ஆற்றல்மிக்க திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
பல்வேறு கேள்விகள் கேட்ட, சிறப்பாக உரையாற்றிய மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சால்வை அணிவித்து பாராட்டி, புத்தகம் வழங்கினார்.
உதகை, கூடலூர் அரசு மற்றும் அறிவியல் கலைக் கல்லூரி, எமரால்டு ஹைட்ஸ் பெண்கள் கல்லூரி, பிராவிடன்ஸ் பெண்கள் கல்லூரி, உதகை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி, ஜெஎஸ்எஸ் பார்மசி கல்லூரி, கேத்தி சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரிகளைச் சார்ந்த சுமார் 700 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.மனோகரி, கோவை மண்டல இணை இயக்குநர் (உயர்கல்வித்துறை) கலைச்செல்வி, உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தனப்பிரியா உள்ளிட் டோர் பங்கேற்றனர்.