ஏழை,எளிய மக்களின் கனவாக இருந்த எங்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் தந்து எங்களது அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்து எதிர்கால வாழ்க்கைக்கு வித்திட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சி என்றென்றும் தொடர வேண்டும். மக்கள் பணி சிறக்க வேண்டும், என கலைஞரின் கனவு இல்ல திட்டம் மற்றும் ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டத்தின் மூலம் பயன்பெற்ற திருப்பூர் மாவட்ட மக்கள் முதலமைச்சருக்கு புகழாரம் சூட்டி உள்ளனர்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நல்லாசியுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல உன்னதமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் 3,551 பயனாளிகளுக்கு ரூ.74.66 கோடி மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்ல திட்டம் மற்றும் ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டப்பணிகளுக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்தாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின் வளர்ச்சிக்கென பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டம், நமக்கு நாமே திட்டம், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டம், சமத்துவபுரம், பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. குடிசை இல்லாத தமிழகம் என்ற இலக்கை அடைவதற்காக, 2010-ல், ‘கலைஞர் வீடு வழங்கும் திட்டம்‘ தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் குடிசைகளுக்குப் பதிலாக பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகள் அமைப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2030-க்குள் ‘குடிசை இல்லாத தமிழகத்தை’ உருவாக்க, கலைஞரின் கனவு இல்லம் என்ற புதிய திட்டம் கிராமப்புறங்களில் 6 ஆண்டுகளில் எட்டு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, முதற்கட்டமாக, 2024&-25 ஆம் ஆண்டில் ஒரு வீட்டிற்கு ரூ.3.50 லட்சம் மதிப்பில் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்படுகிறது.
“அனைவருக்கும் வீடு” கணக்கெடுப்பு தரவுத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள குடும்பங்கள் இந்த திட்டத்தின்கீழ் பயனடைய தகுதியுடையவர்கள், அவர்கள் வீட்டு தளத்திற்கான பட்டா அல்லது உரிமை ஆவணத்தை வைத்திருந்தால். ஆட்சேபணையற்ற புறம்போக்கில் வசிக்கும் குடும்பங்களுக்கு உரிமையை முறைப்படுத்தியவுடன் வீடு வழங்கப்படும். வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்ட இலவச வீட்டுமனை வழங்கப்படும். இத்திட்டத்தின்கீழ், வீட்டின் குறைந்தபட்ச அடுக்குப்பகுதி சமையலறை உட்பட 360 சதுரஅடியாக இருக்கும். அதில் 300 சதுரஅடி ஆர்சிசி கூரையால்மூடப்பட்டிருக்கும், மீதமுள்ள 60 சதுரஅடி ஆர்சிசி அல்லது வேறு எந்தவகை கூரையாக இருக்கலாம். திருப்பூர் மாவட்டத்தில் கலைஞரின் கனவுஇல்லத் திட்டத்தின்கீழ் அவிநாசி ஒன்றியத்தில் 58 பயனாளிகளுக்கு ரூ.2.03 கோடி மதிப்பீட்டிலும், தாராபுரம் ஒன்றியத்தில் 39 பயனாளிகளுக்கு ரூ.1.36 கோடி மதிப்பீட்டிலும், குடிமங்கலம் ஒன்றியத்தில் 210 பயனாளிகளுக்கு ரூ.7.35 கோடி மதிப்பீட்டிலும், மடத்துக்குளம் ஒன்றியத்தில் 135 பயனாளிகளுக்கு ரூ.4.72 கோடி மதிப்பீட்டிலும், மூலனூர் ஒன்றியத்தில் 62 பயனாளிகளுக்கு ரூ.2.17 கோடி மதிப்பீட்டிலும், பல்லடம் ஒன்றியத்தில் 162 பயனாளிகளுக்கு ரூ.5.67 கோடி மதிப்பீட்டிலும், பொங்கலூர் ஒன்றியத்தில் 77 பயனாளிகளுக்கு ரூ.2.69 கோடி மதிப்பீட்டிலும், குண்டடம் ஒன்றியத்தில் 170 பயனாளிகளுக்கு ரூ.5.95 கோடி மதிப்பீட்டிலும், காங்கேயம் ஒன்றியத்தில் 140 பயனாளிகளுக்கு ரூ.4.90 கோடி மதிப்பீட்டிலும், திருப்பூர் ஒன்றியத்தில் 65 பயனாளிகளுக்கு ரூ.2.27 கோடி மதிப்பீட்டிலும், வெள்ளகோவில் ஒன்றியத்தில் 271 பயனாளிகளுக்கு ரூ.9.48 கோடி மதிப்பீட்டிலும், உடுமலைப்பேட்டை ஒன்றியத்தில் 234 பயனாளிகளுக்கு ரூ.8.19 கோடி மதிப்பீட்டிலும், ஊத்துக்குளி ஒன்றியத்தில் 94 பயனாளிகளுக்கு ரூ.3.29 கோடி மதிப்பீட்டிலும் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டத்தின் கீழ் அவிநாசி ஒன்றியத்தில் 290 பயனாளிகளுக்கு ரூ.2.40 கோடிமதிப்பீட்டிலும், தாராபுரம் ஒன்றியத்தில் 83 பயனாளிகளுக்கு ரூ.55.72 லட்சம் மதிப்பீட்டிலும், குடிமங்கலம் ஒன்றியத்தில் 78 பயனாளிகளுக்கு ரூ.63.97 லட்சம் மதிப்பீட்டிலும், மடத்துக்குளம் ஒன்றியத்தில் 111 பயனாளிகளுக்கு ரூ.70.20 லட்சம் மதிப்பீட்டிலும், மூலனூர் ஒன்றியத்தில் 125 பயனாளிகளுக்கு ரூ.66.27 லட்சம் மதிப்பீட்டிலும், பல்லடம் ஒன்றியத்தில் 109 பயனாளிகளுக்கு ரூ.65.67 லட்சம் மதிப்பீட்டிலும், பொங்கலூர் ஒன்றியத்தில் 308 பயனாளிகளுக்கு ரூ.2.18 கோடி மதிப்பீட்டிலும், குண்டடம் ஒன்றியத்தில் 78 பயனாளிகளுக்கு ரூ.45.69 லட்சம் மதிப்பீட்டிலும், காங்கேயம் ஒன்றியத்தில் 48 பயனாளிகளுக்கு ரூ.43.15 லட்சம் மதிப்பீட்டிலும், திருப்பூர் ஒன்றியத்தில் 131 பயனாளிகளுக்கு ரூ.1.27 கோடி மதிப்பீட்டிலும், வெள்ளகோவில் ஒன்றியத்தில் 85 பயனாளிகளுக்கு ரூ.78.60 லட்சம் மதிப்பீட்டிலும், உடுமலைப்பேட்டை ஒன்றியத்தில் 254 பயனாளிகளுக்கு ரூ.3.04 கோடி மதிப்பீட்டிலும், ஊத்துக்குளி ஒன்றியத்தில் 134 பயனாளிகளுக்கு ரூ.76.13 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் திருப்பூர் மாவட்டத்தில் 3,551 பயனாளிகளுக்கு ரூ.74.66 கோடி மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்ல திட்ட வீடுகள், ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டப்பணிகளுக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
திருப்பூர், பல்லடம் வட்டம், கள்ளிமேடு பகுதியை சேர்ந்த விஜயா தெரிவிக்கையில்,நான் பல்லடம் வட்டம், கள்ளிமேடு பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு 37 வயதாகிறது. எனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். நீண்ட நாட்களான வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறோன். நானும் எனது கணவரும் கூலித்தொழிலாளர்களாக உள்ளதால் வாடகை கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருந்து வருகிறோம். எங்களது குழுந்தைகள் கல்விச் செலவு மற்றும் குடும்ப அத்தியாவசியச் செலவுகள் இருப்பதால்எங்களால் எந்த சேமிப்பும் செய்ய முடியாத சூழ்நிலையில் இருந்து வந்தோம்.
சொந்த வீடு என்பது கனவாகவே இருந்து வந்தது. இத்தகைய சூழ்நிலையில்மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞரின் கனவு இல்லம் தந்து அதற்கான ரூ.3.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து எங்கள் குடும்பத்தைப் பெற்றோர் போல் எங்களைக் காத்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், ஏழை, எளிய மக்களின் கனவாக இருந்த எங்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் தந்து எங்களது அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்து எதிர்கால வாழ்க்கைக்கு வித்திட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சி என்றென்றும் தொடர வேண்டும். மக்கள் பணி சிறக்க வேண்டும், என தெரிவித்தார்.
பொங்கலூர் வட்டம், கண்டியன் கோவில் பகுதியைச் சேர்ந்த சரோஜினி கூறியதாவது:
நான் திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம், கண்டியன்கோவில் பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளார்கள். நாங்கள் விவசாய கூலி வேலை செய்து வருகிறோம். அரசு ஒதுக்கீடு செய்த தொகுப்பு வீட்டில் குடியிருந்து வருகிறோம். எங்கள் குடும்பச் செலவு சுமையின் காரணமாக வீட்டை பராமரிக்க முடியாமல் இருந்து வந்தோம்.
இச்சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஊரக வீடுகள் பழுது பார்த்தல்திட்டத்தின் மூலம் பழுது பார்த்தலுக்கான நிதியை ஒதுக்கீடு செய்து உதவிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் சார்பாகவும், எனது குடும்பத்தின் சார்பாகவும் என்றென்றும் தங்கள் ஆட்சிக்கு உறுதுணையாக இருந்து நன்றி கடன் செலுத்துவோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொகுப்பு:
செ.கு.சதீஸ்குமார்.
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
திருப்பூர் மாவட்டம்.