Homeபிற செய்திகள்பழங்கால நாணய கண்காட்சியில் 125, 75, 525 ரூபாய் நாணயங்கள்

பழங்கால நாணய கண்காட்சியில் 125, 75, 525 ரூபாய் நாணயங்கள்

நாமக்கல்லில், பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் கண்காட்சி நேற்று வெள்ளிக்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் நடை பெறுகிறது. நாமக்கல்லில் பழங்கால நாணயங் கள் கண்காட்சி-2024, நாமக்கல் – திருச்செங்கோடு சாலையில் உள்ள சுப்புலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

இதில், 2000 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள், 250-க்கும் மேலான நாடுகளின் ரூபாய் நோட்டுகள், பல வகையான பழைமை சார்ந்த பொருள்கள், சாத னங்கள், சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் பயன்படுத்தப்பட்ட ரூபாய் நோட்டுகள், தற்போது புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள், புதிய வகை நாணயங்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், குத்தீட்டி, குறுவால் உள்ளிட்ட கலை பொருட்களும் பழங்கால கேமிரா, செல்போன், ரேடியோ, பைனாகுலர் ஆகியவைகளும் இடம்பெற்றுள்ளன.

பலரும் அறியாத இந்திய அரசின் 125, 75 ரூபாய் சிறப்பு வெள்ளி நாணயங்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இதில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள நாணய சேகரிப்பாளர்கள் தங்களது நாணயங்களை காட்சிப்படுத்தி உள்ளனர். புதிய வரவாக ரூ.525 நாணயம் அனைவரையும் கவரும் வகையில் கண்காட்சியில் வைத்து இருந்தனர்.

நேற்று (ஜூலை- 19) வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்தக் கண்காட்சி சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடைபெறுகிறது. மாணவர்கள், இளைஞர்கள் இதனை பார்வையிட்டு தாங்கள் விரும்பும் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். இது குறித்து பழங்கால நாணயங்கள் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்சேலம் ரியாஸ் கூறியதாவது:

இதுவரை பல்வேறு மாவட்டங் களில் 100-க்கும் மேற்பட்ட கண்காட் சிகளை நடத்தி உள்ளோம். சேலம், கோவையில் தான் அதிகம் நடத்தப் பட்டுள்ளது. நாமக்கல்லில் இது இரண்டாவது முறையாக 15க்கும் மேற்பட்ட அரங்குகளில் இந்த நாணயக் கண்காட்சியை நடத்துகிறோம். மூன்று நாள்கள் நடைபெறும் இக்கண்காட்சியினை மக்கள் பார்வையிடுவதுடன், பல் வேறு வகையில் விழிப்புணர்வு பெற முடியும். தங்களுடைய குழந்தைகளுக்கு தெரியப்படுத்த பழங்கால பொருள்களை வாங்கியும் பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கண்காட்சியை பார்வையிட்ட நாமக்கல்லை சேர்ந்த கால் டாக்சி உரிமையாளர் சசிகுமார் கூறுகையில், பழங்கால நாணயங்கள் ஒரே இடத்தில் இருப்பது ஆச்சரியமாக உள்ளதா கவும் இதுவரை பார்த்திராத நாணயங்கள் மற்றும் கலைப் பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தனது குழந்தைகளுடன் கண் காட்சிக்கு அழைத்து வந்து பார்வையிடுவதாகவும் தனது குழந்தைகளுக்கு பழங்கால நாணயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img