fbpx
Homeபிற செய்திகள்விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய அம்ரிதா வேளாண்மை கல்லூரி மாணவர்கள்

விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய அம்ரிதா வேளாண்மை கல்லூரி மாணவர்கள்

அரசம்பாளையம் அம்ரிதா வேளாண்மை கல்லூரியில் 4ம் ஆண்டு பயிலும் மாணவர்கள் அவர்களின் கிராம தங்கல் பயிற்சி திட்டத்தின் கீழ் சொலவம்பாளையத்தில் உள்ள கால்நடை விவசாயிகளுக்கு மடிநோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் சிஎம்டி (CMT) பற்றிய செயல் விளக்கம் நடத்தினர்.

இதில் மாணவர்கள் விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு மடிநோய் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் சிஎம்டி பற்றிய செயல் விளக்கம் நடத்தினர்.

விவசாயிகள் அவர்கள் செய்யும் தவறுகளை அறிந்து கொண்டு அதற்கான மருத்துவம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை அறிந்து கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்வு கல்லூரி முதல்வர் சுதீஷ் மணாலில், பேராசிரியர்கள் சிவராஜ், சத்யபிரியா, சுரேஷ் குமார், சிவசபரி, வினோதினி ஆகியோர் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img