சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவை காளப்பட்டி அருகே உள்ள கைக்கோளபாளையம் பாரதி விளையாட்டு குழுவின் 39 ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான கபடி போட்டி, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் கைக் \கோள பாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளி மைதானத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.
கோவை மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளைச் சார்ந்த 32 கபடி அணிகள் பங்கேற்றன. இதில் கேபிஆர் கல்லூரி அணி முதலாம் இடத்தையும், 46 தடாகம் அணியினர் இரண்டாம் இடத் தையும், ஆர்விகேசி அணியினர் மூன்றாம் இடத்தையும், என்ஜிபி கல்லூரி அணி நான்காம் இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப் பையுடன் ரொக்க பரிசும் வழங் கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை பாரதி விளையாட்டு குழுவின் தலைவர் சண்முகம் செயலாளர் முருகேசன், பொருளாளர் ராம சாமி உள்ளிட்ட நிர்வாகிகளும், உறுப்பினர்களும் சிறப்பாக செய்து இருந்தனர்.



