தருமபுரி மாவட்டம். காரிமங்கலம் அரசு உயர் நிலைப் பள்ளியில் கடந்த 28 வருடங்களுக்கு பிறகு 12ம் வகுப்பு படித்த மாணவர்கள் தங்கள் படிப்பினை முடிந்து கொண்டு பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில் 28 வருடங்களுக்கு பிறகு பிரிந்த மாணவர்களை ஒன்று சேர்ந்து சந்திப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு அவர் களின் விலாசங்களை கண்டுபிடித்தும் செல் நெம்பர் மூலம் அனைவ ருக்கும் அழைப்பு விடுக் கப்பட்டது.
அதனை தொடர்ந்து அனை வரும் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் 28 வருடத்திற்கு பிறகு ஒன்று கூடினார்கள் சிவராஜ், மகேந்திரன், முனுசாமி, பெரியசாமி, கோவிந் தசாமி, ராதா, செல்வி, என 29 முன்னாள் மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் பழைய அன்பை பகிர்ந்து கொண்டனர்.
மாணவர்கள் தங்கள் சந்திப்பு பற்றியும் பள்ளி காலத்தில் நடைப்பெற்ற இனிமையான நிகழ்வுகளை நினைவு படுத்தியும் பேசி யும் மகிழ்ச்சியடைந்தனர்.
பின்பு அனைவரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்து தங்கள் குடும்பம் மற்றும் நட்புகளையும் வெளிப்ப டுத்தி மகிழ்ந்தனர்.
பின்பு அனைவரும் ஒன்று சேர்ந்து புகைபடம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
அதனை தொடர்ந்து அனைவருக்கும் கம கம கறி விருந்து வழங்கப்பட்டது.
விழாவில் மாணவர் களின் குடும்பத்தை சேர்ந்த 250 க்கும் மேற்பட் டவர்கள் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.