யூனியன் பேங்க் ஆப் இந்தியா சார்பில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவதற்காக பிரெய்லி முறையில் அச்சிடப்பட்ட கந்தசஷ்டி கவசம் நூல் வெளியீட்டு விழா கோவையில் உள்ள பார்வையற்றோர் தேசிய இணைய அலுவலகத்தில் நடைபெற்றது. நூலை வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் மணிமேகலை வெளியிட்டார். அருகில் சென்னை வங்கியின் மண்டலத் தலைவர் சத்யபென் பெஹாரா, கோவை பிராந்திய தலைவர் எஸ்.எஸ்.லாவண்யா ஆகியோர் உள்ளனர். மேலும் பார்வையற்றோர் தேசிய இணையம் அலுவலக கணினி மையத்திற்கு குளிர்சாதன மற்றும் இருக்கை வசதிகளை யூனியன் பேங்க் ஆப் இந்தியா தனது பெருநிறுவன சமுதாயப் பொறுப்பு (சிஎஸ்ஆர்) திட்டத்தின் கீழ் செய்து கொடுத்துள்ளது.