fbpx
Homeபிற செய்திகள்எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் அன்னதானம், இலவச வேட்டி சேலை

எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் அன்னதானம், இலவச வேட்டி சேலை

பல்லடம் வடக்கு ஒன்றிய கழகம் சார்பில், கரைப்புதூர் ஊராட்சி, என்எஸ்கே நகர் கிளை யில், எம்ஜிஆர் 106வது பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா கொண்டாடப் பட்டது. இதில் 200 பெண்களுக்கு சேலையும், 100 பயனாளிகளுக்கு வேட் டிகளும், 500 பேருக்கு அன்னதானமும் வழங்க பட்டது.

திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், உடுமலை ராதாகிருஷ்ணன்.

பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் ஆனந்தன், மாவட்ட அவைத்தலைவர் சிவாசலம், எம்ஜிஆர் இளைஞர் மன்ற செயலாளர் மோகன்ராஜ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சுப்ர மணியம், பல்லடம் தொகு திக்குட்பட்ட, நகர, ஒன்றிய, பகுதி கழகச் செயலாளர்கள், சார்பு அணி மாவட்ட செயலா ளர்கள், ஒன்றிய நகர பகுதி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட ஐடி விங்க் இணை செயலாளர் மிருதுளா நடராஜன், கரைப்புதூர் ஊராட்சி செயலாளர் விஸ்வநாதன், பாசறை சதிஷ் ஆகியோர் சிறப்பாக விழா ஏற்பாடு செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img