fbpx
Homeபிற செய்திகள்திமுகவிற்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி ஆதரவு

திமுகவிற்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி ஆதரவு

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி இந்திய அளவில் இந்தியா கூட்டணிக்கும் தமிழகத் தில் திமுக கூட்டணிக்கும் ஆதரவளித்துள்ளதாக அதிகாரப்பூர்வ கடிதம் வழங்கியுள்ளது என அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கர்ணன் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் தலைமையிலான அணியினர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததோடு தமிழகம் முழுவதும் அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரமும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று திருப்பூரில் உள்ள அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கர்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய தலைமை தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்திருப்பதாகவும் குறிப்பாக தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஏற்கனவே ஆதரவளித்து அறிவிப்பு வெளியிடப்பட்டதோடு, தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்து இருப்பதாகவும் ஆனால் கதிரவன் தலைமையிலான அணியினர் அதிமுகவிற்கு ஆதரவு என கட்சியின் அதிகாரப்பூர்வமில்லாத அறிவிப்பை வெளியிட்டு வருவதாகவும் அதனால் அதிமுகவிற்கும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் கதிரவன் தன்னிச்சையாக எடுத்த முடிவு எனவும் தெரிவித்தார்.

அகில இந்திய பார்வர்டு உள்ள கட்சி தமிழகத்தில் 100% திமுகவிற்கு ஆதரவளித்திருப்பது மட்டுமல்லாது 20 நாடாளுமன்ற தொகுதியில் பணிபுரிய பொறுப்பாளர்களை நியமித்து அறிவிப்பு வெளியிடப்பட்டி ருப்பதாகவும் கர்ணன் தெரிவித்தார்.

தமிழகத்தில் 40 தொகுதிகளில் திமுக தலைமையிலான தமிழகத்தில் 40 தொகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணியும் இந்திய அளவில் இந்தியா கூட்டணியும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எனவும் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img