fbpx
Homeபிற செய்திகள்அரசு அலுவலர்கள், காவலர்கள் தபால் வாக்களிப்பு

அரசு அலுவலர்கள், காவலர்கள் தபால் வாக்களிப்பு

பிற தொகுதிகளில் வாக்குரிமை பெற்று விழுப் புரம் மக்களவைத் தொகுதியில் தேர்தல் பணியாற்றி வரும் அரசு அலுவலர்கள், காவலர் கள் தங்களது தபால் வாக்கை ஞாயிற்றுக்கிழமை செலுத்தினர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சிய ரகக் கூட்டரங்கில் அமைக்கப்பட்டுள்ள வசதி மையத்தில் அங் கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பிற தொகுதிகளில் வாக்குரிமை பெற்ற அரசு அலுவலர்கள், காவலர்கள், செய்தியாளர்கள் தபால் வாக்கு செலுத்தும் நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

இந்தப் பணியை பார்வையிட்ட பின்னர், தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான சி.பழனி கூறியதாவது: விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், காவலர்களுக்கு தபால் வாக்கு செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டு, அவர்கள் வாக் களித்து விட்டனர்.

தொடர்ந்து, பிற தொகுதிகளில் வாக்குரிமை பெற்று, விழுப்புரத்தில் பணியாற்றி வரும் அலுவலர் கள், காவலர்கள், செய்தியாளர்கள் தபால் வாக்குகளை செலுத்துவதற்காக மாவட்ட ஆட்சியர கத்தில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இதில், அந்தந்த தொகுதிகளின் தேர்தல் நடத் தும் அலுவலர் மூலமாக பெறப்பட்ட தபால் வாக்காளர் தகவல் சீட்டை உரியவர்களிடம் வழங்கி சரி பார்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர்கள் தங்களது வாக்கை செலுத்தினர். விடுபட்ட வர்களுக்கு திங்கள்கிழமை மீண் டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்றார் ஆட்சியர். இதையடுத்து, மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை,வாகனத் தணிக்கை கண்காணிப்பு மையம், மாவட்ட ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், தேர்தல் தொடர்பான புகார்கள், அதன் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை கள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

ஆய்வின் போது, மாவட்ட தொழில் மையப் பொது மேலாளர் அருள், துணை ஆட்சியர் ஜெகதீசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தமிழரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img