fbpx
Homeபிற செய்திகள்இஸ்லாமியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் - அனைத்து ஜமாத் அமைப்பினர் எதிர்பார்ப்பு

இஸ்லாமியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் – அனைத்து ஜமாத் அமைப்பினர் எதிர்பார்ப்பு

சிறுபான்மை நலன் களை பாதுகாக்கும் அரசாக செயல்பட்டு வரும் தமிழக முதல்வர், கோவையில் உள்ள இஸ் லாமிய மக்களின் பல் வேறு கோரிக்கைகளை பரிசீலிக்க தனி கவனம் செலுத்த வேண்டும் என கோவை மாவட்ட அனை த்து ஜமாத் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் கோவையை சேர்ந்த ஐக்கிய ஜமாத் பொதுச்செயலாளரும் அ.தி.மு.க.வை சேர்ந்தவ ருமான சி.டி.சி.ஜப்பார் பா.ஜ.க. கூட்டணியில் இஸ்லாமியர்கள் ஆதரவு குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தார்.
இது இஸ்லாமியர் களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஜப்பார் உடனடியாக ஐக்கிய ஜமாத் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் கோவை மாவட்ட அனைத்து ஜமாத் சார்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஜமாத் தலைவர் முஹம்மது அலி செய்தியாளர்களிடையே பேசுகையில், கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கோவையில் நடை பெற்ற பல்வேறு துயர சம்பவங்களில் காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் இணக்கமாக நடந்துள்ளனர். ஆனால் தற்போது நிலை தலை கீழாக உள்ளது.

இஸ்லாமிய ஜமாத் மக்களின் கோரிக்கைகளை சரிவர பரிசீலிப்பதில்லை. தமிழக முதல்வர் கோவை மாவட்ட இஸ்லாமிய மக்களின் கோரிக்கைகள் மற்றும் நிலைகளை ஆய்வு செய்ய தனி செயலாளரை நியமித்து குறைகளை கேட்க வேண்டும்.

இஸ்லாமிய வேதங் களை படித்த அறிஞர்களாக அறியப்படும் ஆலீம்கள் தங்களை தரம் தாழ்த்தி நடந்து கொள்வதற்கு கண்டனங்களை பதிவு செய்கிறோம்.
மேலும் ஐக்கிய ஜமாத் பொதுச்செயலாளர் சி.டி.சி.ஜப்பார் கூறிய கருத்து அவர் கட்சி சார்ந்த கருத்து. இதில் ஜமாத் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது” என்றார்.
இந்த சந்திப்பின் போது கோவை மாவட்ட அனைத்து ஜமாத் நிர் வாகிகள் ஹஜ்ரத் அப்துல் ரகுமான், சுக்ருல்லா பாபு, பசுலுர் ரஹ்மான் ஆகி யோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img