தூத்துக்குடி மாவட்ட ஷிட்டோ ரியூ கராத்தே அசோஷியேஷன் மற்றும் மாஸ்டர் ஆர்.கே.பறக்கும் படை அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான கராத்தே சேம்பியன் ஷிப் போட்டி தூத்துக்குடி விக்டோரியா சிபிஎஸ்சி பள்ளி வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் ஒவ்வொரு தனி பிரிவிலும் முதல் மற்றும் இரண்டாம் மூன் றாம் இடத்தில் வெற்றி பெறும் மாணவ மாணவி களுக்கு மண்டல அளவி லான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டதில் 200 க்கும் மேற்பட்ட மாணவ மாண விகள் கலந்து கொண்டனர்.
இதில் தூத்துக்குடியில் முதல்முறையாக 30 திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சேம்பியன் ஆஃப் சாம்பியன் கோப்பை வழங்கப்பட்டது .
இந்த நிகழ்ச்சியில் விக்டோரியா சிஙிஷிணி பள்ளி முதல்வர் ஜெகநாதன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். திருநெல்வேலி மாவட்ட ஷிட்டோ ரியூ கராத்தே அசோஷியேஷன் பொதுச் செயலாளர் சென்சாய் எஸ்.டி.சுபகணேஷ், தூத்துக் குடி மாவட்ட பொதுச் செயலாளர் சென்சாய் இ.ரத்னகுமார், இணை செயலாளர் சென்சாய் எஸ்.ஆனந்த், தூத்துக்குடி மாவட்ட பயிற்சியாளர்கள் மாஸ்டர் சரவணகுமார், மாஸ்டர் சுபாஷ் விஷ்ணு குமார் மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.



