Homeபிற செய்திகள்ஜி.கே.என்.எம். மருத்துவமனை சி.இ.ஓ.வுக்கு அமெரிக்காவின் உயரிய ஃபெலோஷிப் கௌரவம்

ஜி.கே.என்.எம். மருத்துவமனை சி.இ.ஓ.வுக்கு அமெரிக்காவின் உயரிய ஃபெலோஷிப் கௌரவம்

ஜி.கே.என்.எம். மருத்துவமனை முதன்மை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமிக்கு, அமெரிக்க மருத்துவர்கள் தலைமைத்துவக் கழகத்தின் (AAPL) சிறப்புமிகு ஃபெலோஷிப் (DFAAPL) கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவின் அரிசோனா மாநிலம் ஸ்காட்ஸ்டேலில் அக்டோபர் 22-ல் நடைபெற்ற அமைப்பின் வருடாந்திர மாநாட்டில், அதன் தலைவர் டாக்டர் கிளாட் பிரன்சன் இந்த அங்கீகாரத்தை வழங்கினார்.


மருத்துவத் தலைமைத் துவம், சுகாதார நிர்வாகம், மருத்துவச் சேவைகளின் தர மேம்பாடு மற்றும் அடுத்த தலைமுறை மருத்துவத் தலைவர்களை உருவாக்குவதில் ஆற்றிய பங்களிப்புக்காக இந்த கௌரவம் வழங்கப்பட் டுள்ளது. 2015-ல் கோவை திரும்பிய டாக்டர் ரகுபதி வேலுசாமி, 750 படுக்கைகள் கொண்ட ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றி வருகிறார்.

படிக்க வேண்டும்

spot_img