கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி-&2026 விற்பனை தொடங்கியுள்ளது. இதையொட்டி, பல்வேறு ரக கைத்தறி ஆடைகள் மற்றும் ஜவுளிகளுக்கு 30% சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கடந்த 91 ஆண்டுகளாக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தரமான பருத்தி மற்றும் பட்டு ரகங்களைக் கொள்முதல் செய்து, இந்தியா முழுவதும் உள்ள தனது விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.
தீபாவளி விற்பனையை யொட்டி, புதிய ரகங்களாக பிரிண்டட் சட்டைகள், பிரிண்டட் குர்த்திகள், எம்பி ராய்டரி குர்த்திகள், ஸ்ட் ரெய்ட் பேண்ட், பலாஸோ பேண்ட், கிராப் டாப் செட்கள், காட்டன் ஸ்லப் மற்றும் கலம்காரி குர்த்திகள், சிறுமிகளுக்கான பட்டுப் பாவாடை சட்டைகள் ஆகியவை விற்பனைக்காக வரவழைக்கப்பட்டுள்ளன.
மேலும், புதிய வண்ணங்கள் மற்றும் வடி வமைப்புகளில் பட்டுச் சேலைகள், மென்பட்டுச் சேலைகள், பருத்திச் சேலை கள், நைட்டிகள், ஆண்க ளுக்கான லினன், சுருக்கம் ஏற்படாத மற்றும் ஸ்லிம் ஃபிட் ரெடிமேட் சட்டைகள் உள்ளிட்ட பல்வேறு ரகங்களும் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளன.
வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஞாயிற்றுக் கிழமை உள்ளிட்ட அனைத்து விடுமுறை நாட்களிலும் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் செயல்படும் என்று மண்டல மேலாளர் ராஜேஷ் குமார் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் மாதாந்திர சேமிப்புத் திட்டமும் செயல்ப டுத்தப் படுகிறது. இத்திட்டத்தில் மாதம் ரூ.300 முதல் சேமிக்கலாம். தொடர்ந்து 11 மாதங்கள் சந்தா செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, 12-ஆவது மாதச் சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமே செலுத்தும். திட்டத்தின் முதிர்வின்போது கிடைக்கும் தொகையைக் கொண்டு கூடுதல் பயனுடன் ஜவுளிகளை வாங்கலாம்.
மேலும், சேமிப்புத் திட்டத்தில் இணைந்துள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆண்டு முழுவதும் 30% சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.



