ஈரோடு மாவட்ட அளவிலான முதலாவது பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான கிக் பாக்ஸிங் போட்டி, செல்லம்மாள் திருமண மண்டபத்தில் நடை பெற்றது. முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென் னரசு தலைமை வகித்தார்.
போட்டிக்கான ஏற்பாடுகளை ஈரோடு மாவட்ட கிக் பாக்ஸிங் சங்கப் பொதுச் செயலாளர் யூசுப் செய்திருந்தார்.
சேலத்தைச் சேர்ந்த என்.பிரேம்குமார், நாமக்கல்லைச் சேர்ந்த எஸ்.எஸ். அபிஷேக், சேலத்தைச் சேர்ந்த கணேஷ் ஆகியோர் நடுவர்களாகப் பணியாற்றினர்.
எல்.ஜே.கே. மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.திரள் குமார், மாநில அமைப்புச் செயலாளர் சி.எஸ்.சத்திய மூர்த்தி, ஈரோடு மாவட்ட கிழக்கு செயலாளர் சி.எஸ்.பிரபு, பொறியாளர் எஸ். அருள்குமார் ஆகியோர் போட்டியைத் தொடங்கி வைத்தனர்.
ஈரோடு மாவட்ட விளையாட்டு அலுவலர் சி. திவ்யநாகேஸ்வரி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எஸ்.சாலமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். பாஜக ஈரோடு தெற்கு மாவட்ட துணைத் தலைவர் பி.பாஸ்கர் உள்ளிட்டோரும் பங்கேற் றனர்.
ஆர்.கே.எம். விஷுவல் ஆப்டிகல்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த எஸ். ஹாஜா ஷெரிப், பி.ஓ.கே.பி.ஏ. துணைச் செயலாளர் எம்.ராஜேஷ்குமார், ஈ.டி.கே.பி.ஏ. துணைச் செயலாளர் ஏ.ஷெரிப், ஆட் மேஜிக்ஸ் நிறுவனத்தின் கிரியேட்டிவ் இயக்குநர் பி.சகாய சுரேஷ், ஸ்ரீ ராகவேந்திரா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தைச் சேர்ந்த எஸ்.பாலன் மற்றும் கராத்தே மற்றும் தற்காப்புக் கலைப் பயிற்சியாளர்கள் டி.பரமேஸ்வரன், எஸ்.எஸ்.விமல், ஒய். முஸ்தபா, எல்.அந்தோணி பீட்டர், எஸ். சதாசிவம், சி.சுரேஷ், மாணவர்கள் கே.சி.பிரபின், எம்.ஷேக் முகமது ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சங்க துணைச் செயலாளர் எஸ்.ராபின் டேவிட் குமார் நன்றி கூறினார்.



