Homeபிற செய்திகள்தீபாவளி விற்பனைக்கு கோ-ஆப்டெக்ஸில் 30 சதவீதம் தள்ளுபடி

தீபாவளி விற்பனைக்கு கோ-ஆப்டெக்ஸில் 30 சதவீதம் தள்ளுபடி

தீபாவளி 2026 பண்டிகையை முன்னிட்டு, கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை வ.உ.சி. பூங்கா அருகிலுள்ள மருதம் மற்றும் சாய்பாபா காலனி ஸ்ரீபாலமுருகன் விற்பனை நிலையங்களில் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், புதிய வடிவமைப் புகளிலான பட்டுச் சேலைகள், பருத்திச் சேலைகள், சுடிதார் வகைகள், குழந்தைகளுக்கான பட்டுப் பாவாடை சட்டைகள், ஆண்களுக்கான ஆயத்தச் சட்டைகள் உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
பழைய பட்டுப் புடவைகளை மாற்றிப் புதிய துணிகள் வாங்கும் சிறப்புத் திட்டமும் செயல்படுகிறது.
மாதம் ரூ.300 முதல் சேமிப்புத் திட்டம் தொடங்குகிறது. 11 மாதத் தவணைகளைச் செலுத்தினால், 12-வது மாதத் தவணையை நிறுவனமே செலுத்தும். ஞாயிற்றுக்கிழமைகளிலும் விற்பனை நிலையங்கள் இயங்கும் என மண்டல மேலாளர் நா. இராஜேஷ்குமார் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img