Homeபிற செய்திகள்இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நடத்திய ஊழல் விழிப்புணர்வு நடைபயணம் கோவையில் நடைபெற்றது

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நடத்திய ஊழல் விழிப்புணர்வு நடைபயணம் கோவையில் நடைபெற்றது

ஊழல் விழிப்புணர்வு வாரம் 2026-ஐ முன்னிட்டு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கோவை மண்டல அலுவலகம் சார்பில் இன்று (17ம் தேதி) கோவை ரேஸ் கோர்ஸ் நடைபாதையில் ஊழல் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.
இந்த நடைபயணத்திற்கு வங்கியின் பொது மேலாளர் மா.துர்கா தேவி தலைமை தாங்கினார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உற்சாகமாக இதில் கலந்து கொண்டனர்.


நேர்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் ஒழுக்கமான சேவையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுச் சேவையில் உயர்ந்த நெறிமுறைகளையும் விழிப்புணர்வு பண்புகளையும் கடைபிடிக்கும் உறுதிமொழியுடன் பங்கேற்பாளர்கள் நடைபயணத்தில் ஈடுபட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img